• February
    22
    Saturday

Main Area

Main



டூட்டி நேரத்துல என்ன சிம்ரன் இதெல்லாம்?

TikTok
TikTok

குடியை நிறுத்திவிட்ட பிறகு, மதுக்கடைகளை தாண்டிச்செல்லும்போதெல்லாம், கண்டும் காணாததுமாக வடிவேலு மாதிரி வேறுபக்கம் தலையை திருப்பிக்கொண்டு சென்றாலும், 'பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம்'னு நொண்டி அடிச்சுக்கிட்டே வந்து ஞாபகப்படுத்தித் தொலைக்கும்போது, ஒரு மனுசன் என்னதான் பண்ணுவான். சிலருக்கு மது, சிலருக்கு டிக் டாக் சோதனை. என்னது டிக்டாக்கால சோதனையா? ஆமாங்க ஆமா. எவ்வளவு அடக்க முயற்சித்தாலும், டிக் டாக் வீடியோ போடாமல் சிலருக்கு கைகால் எல்லாம் உதற ஆரம்பித்திருக்கிறது.

Police doing tik tok

கடலூர் பீச்சில் யூனிஃபார்மோடு இரண்டு பெண் காவலர்கள் டிக் டாக் வீடியோவுக்கு ஆடியிருக்கிறார்கள். "ஜ‌லக்கு ஜ‌லக்கு ஜரிகை சேலை ஜலக்கு ஜலக்கு" பாட்டுக்கு குலுக்கல் டான்ஸ் ஆடியிருக்கிறார்கள். கடந்த வாரம் அக்யூஸ்டு ஒருவனோடு கேரள போலீசார் டிக் டாக் வீடியோ வெளியிட்டு ஃபேமஸானதைப் பார்த்த தமிழக போலீசாருக்கும் அந்த ஆசை வந்துவிட்டது போல. பொதுமக்கள் வந்துபோகும் பீச்சில், பகல் பொழுதில் டிக் டாக் வெளியிட்டிருக்கிறார்கள். காவல்துறை உஙக்ள் நண்பன் தான். அதுக்காக டிக்டாக் வீடியோவெல்லாம் டூ மச் ஆபிசர்!

2018 TopTamilNews. All rights reserved.