கொரோனாவால் களை இழந்த கூடலூர் புத்தரிசி திருவிழா

கொரோனாவால் களை இழந்த கூடலூர் புத்தரிசி திருவிழா

நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபெற்ற பழங்குடியின மக்களின் புத்தரிசி திருவிழாவில், கொரோனா காரணமாக குறைந்த அளவிலான மக்கள் கலந்துகொண்டு, பாரம்பரிய முறைப்படி திருவிழாவை நடத்தினர்.

கொரோனாவால் களை இழந்த கூடலூர் புத்தரிசி திருவிழா

கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வரும் மவுண்டாடன் செட்டி, குரும்பர், பணியர், காட்டுநாயக்கர், தோடர் இன மக்கள், தங்களின் குலதெய்வமான “நம் போல கோட்டை வேட்டைக்கருமகன்” கோவிலுக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் தங்களது வயல்களில் விளையும் முதல் நெல்கதிரை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இதனையொட்டி, ஆதிவாசி மக்கள் தங்களது வயல்களில் உள்ள பால் கதிர்களை அறுவடை செய்து, அதனை ஊர்வலமாக எடுத்துச்சென்று, தங்களது குலதெய்வ கோயிலில் வைத்து பூஜைசெய்து, பின்னர் அதனை “நம்போல கோட்டை வேட்டைக்கருமகன்” கோவிலுக்கு சென்று வழங்குவர்.

கொரோனாவால் களை இழந்த கூடலூர் புத்தரிசி திருவிழா
கொரோனாவால் களை இழந்த கூடலூர் புத்தரிசி திருவிழா

மேலும், புத்தூர் வயல் மகாஷ்னு கோவில், மங்குழி பர தேவதையம்மன் கோவில்களுக்கும் கதிர்கள் பூஜைக்காக கொண்டு செல்லப்படும். இந்த நிகழ்ச்சியில் ஆதிவாசி இன மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு, தங்கள் பாரம்பரிய இசைக்கு நடனமாடி கதிர்களை ஊர்வலமாக எடுத்துச்சென்று, கோவில் பூசாரியிடம் வழங்குவது வாடிக்கையாக நடைபெறும்.

கொரோனாவால் களை இழந்த கூடலூர் புத்தரிசி திருவிழா

பின்னர், கோயிலில் பூஜிக்கப்பட்ட கதிர்கள், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் கூடலூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களும், பழங்குடியின மக்களும் கலந்துகொள்வர். ஆனால் இந்த வருடம் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, புத்தரிசி திருவிழா மிகவும் சாதாரணமான முறையில் நடைபெற்றது. இதில், குறைந்த அளவிலான ஆதிவாசி இன மக்களே கலந்துகொண்டு, தங்கள் பாரம்பரிய இசை, நடனத்துடன் கதிர்களை அறுவடை செய்து, கோயிலுக்கு அனுப்பி வைத்தனர்.

கொரோனாவால் களை இழந்த கூடலூர் புத்தரிசி திருவிழா