மாயமான சிறுமியை மீட்டு தாயிடம் ஒப்படைத்த பெண் காவலருக்கு குவியும் பாராட்டு!

 

மாயமான சிறுமியை மீட்டு தாயிடம் ஒப்படைத்த பெண் காவலருக்கு குவியும் பாராட்டு!

கடலூர்

கடலூரில் மாயமான 7 வயது சிறுமியை மீட்டு தாயிடம் ஒப்படைத்த பெண் காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பெரிய பரூர் கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் தனது 7 வயது பெண் குழந்தையை வீட்டில் விட்டு விட்டு பணிக்கு சென்றார். இந்த நிலையில் பிற்பகல் 3 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த சிறுமி தனது அம்மாவை தேடி வீட்டை விட்டு வெளியே சென்றது.

இந்த நிலையில் மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்து பார்த்த சரஸ்வதி, சிறுமி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால், இதுகுறித்து அவர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

மாயமான சிறுமியை மீட்டு தாயிடம் ஒப்படைத்த பெண் காவலருக்கு குவியும் பாராட்டு!

புகாரின் பேரில் காவலர் அஷ்டலட்சுமி உடனடியாக காணாமல் போன குழந்தையை தேடி வந்தார். அப்போது, உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நின்றிருந்த சிறுமியை மீட்டு விசாரித்த போது, அது காணாமல் சரஸ்வதியின் குழந்தை என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, காவலர் அஷ்டலட்சுமி குழந்தையை தாயிடம் ஒப்படைத்தார். காணாமல் போன குழந்தையை கண்டிபிடிக்க உதவிய காவலருக்கு, சரஸ்வதி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து சென்றார்.