கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட கடலூர் மாவட்ட எஸ்.பி., ஶ்ரீஅபிநவ்

 

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட கடலூர் மாவட்ட எஸ்.பி., ஶ்ரீஅபிநவ்

கடலூர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ்-க்கு எதிரான போரில் முன்கள பணியாளர்களாக திகழ்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வந்தது. இதன் தொடர்ச்சியாக, மாநிலம் முழுவதும் வருவாய் மற்றும் காவல் துறையினருக்கு தடுப்பூசி செலுத்தும் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட கடலூர் மாவட்ட எஸ்.பி., ஶ்ரீஅபிநவ்

இதனையொட்டி, கடலூர் மாவட்ட காவல் துறையினருக்கு இன்று தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. கடலூர் அரசு மருத்துமனையில் நடந்த இந்த முகாமில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீஅபிநவ் கலந்துகொண்டு, தடுப்பூசி போட்டு கொண்டார்.

அவரை தொடர்ந்து, கடலூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியன், டிஎஸ்பி-க்கள் சுந்தரம், வெங்கடேசன், கங்காதரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.