கடலூர்- நடராஜர் கோயிலில் பிரம்மாண்ட கொலுவை கண்டு ரசிக்கும் பக்தர்கள்

கடலூர்- நடராஜர் கோயிலில் பிரம்மாண்ட கொலுவை கண்டு ரசிக்கும் பக்தர்கள்

கடலூர்

நவராத்திரி விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கொலு பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது

கடலூர்- நடராஜர் கோயிலில் பிரம்மாண்ட கொலுவை கண்டு ரசிக்கும் பக்தர்கள்

.கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு நவராத்திரி விழா தொடங்கியுள்ள நிலையில், நடராஜர் கோயிலில் சுமார் 30 அடி நீளமும், 30 அடி அகலமும், 30 அடி உயரமும் கொண்ட பிரம்மாண்ட மேடையில் கொலு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொலுவில் 21 பெரிய படிகள்

கடலூர்- நடராஜர் கோயிலில் பிரம்மாண்ட கொலுவை கண்டு ரசிக்கும் பக்தர்கள்

அமைத்து சுமார் 2 ஆயிரத்து 500 முதல் மூவாயிரம் பொம்மைகள் வரை கலை நயம் பொங்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. இதில், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், முருகன், சிவன், விஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட தெய்வ பொம்மைகளும், விஷ்ணுவின் தசவதார வடிவ பொம்மைகளும், இதிகாச

கடலூர்- நடராஜர் கோயிலில் பிரம்மாண்ட கொலுவை கண்டு ரசிக்கும் பக்தர்கள்

புராணங்களை எடுத்துச் சொல்லும் வகையில் வண்ணமயமான பொம்மைகளும் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நமது பாரம்பரியத்தையும் திருவிழாக்களையும் தெரிவிக்கும் விதமான பொம்மைகளும் கொலுவில் இடம்பெற்றுள்ளது. பக்தர்களை கவரும் விதமாக வண்ண மின்விளக்குகள் ஒளிர, செயற்கை நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொலுவை பரவசத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.