கடலூர்: திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ சி.வெ.கணேசனுக்கு கொரோனா உறுதி

 

கடலூர்: திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ சி.வெ.கணேசனுக்கு கொரோனா உறுதி

கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது. சாதராண மக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் என அனைவருக்கும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், சமீப காலமாக அரசியலில் இருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் பரவி வருகிறது.

கடலூர்: திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ சி.வெ.கணேசனுக்கு கொரோனா உறுதி

திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ சி.வெ.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று உறுதியானதையடுத்து எம்.எல்.ஏ கணேசன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளார்.

ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு, செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான், பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரன், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு, கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.