மத்திய பல்கலைக்கழகங்களில் சேர விரும்புவர்களின் கவனத்திற்கு… நுழைவு தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு!

மத்திய பல்கலைக்கழகங்களில் சேர விரும்புவர்களின் கவனத்திற்கு… நுழைவு தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு!

புதிய கல்விக் கொள்கையின்படி மருத்துவம் மட்டுமல்லாமல் பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட உயர்க் கல்வி பிரிவுகளில் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அதிரடியாக அறிவித்தது. இந்த நுழைவுத் தேர்வு மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழங்களில் இது நடைபெறும். மாநில பல்கலைக்கழகங்களுக்கு மாநில அரசு முடிவு செய்யும்.

மத்திய பல்கலைக்கழகங்களில் சேர விரும்புவர்களின் கவனத்திற்கு… நுழைவு தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு!

அதன்படி இந்தாண்டு முதல் 41 மத்திய பல்கலைக்கழங்களில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வு (CUCET) வரும் ஜூன் மாதம் நடத்தப்படும் என கல்வி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வானது மூன்று மணி நேரம் கணினி வழியில் நடத்தப்படுகிறது. தவறான பதில் ஒன்றுக்கு 0.25 மதிப்பெண் குறைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தேர்வுக்கான விண்ணப்ப பதிவு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அடுத்த கல்வியாண்டு முதல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.