முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ்-ஐ நிறுத்த விரும்பும் பாஜக! சிடி ரவி சூசக ட்வீட்

 

முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ்-ஐ நிறுத்த விரும்பும் பாஜக! சிடி ரவி சூசக ட்வீட்

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்று இரு தரப்பினரும் ஒருமனதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் பாஜக, முதல்வர் வேட்பாளரை நாங்கள் தான் அறிவிப்போம் என திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. ஆனால், அதனை ஏற்க மறுக்கும் அதிமுகவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தால் மட்டுமே கூட்டணி தொடரும் என்று கூறி வருகின்றனர்.

முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ்-ஐ நிறுத்த விரும்பும் பாஜக! சிடி ரவி சூசக ட்வீட்

இத்தகைய சூழலில், முதல்வர் வேட்பாளர் குறித்து சி.டி.ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைத்த நல்ல திட்டங்களை மக்களிடம் எடுத்து சென்று தமிழகத்தை செழிப்பான வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர தமிழ் மக்கள் காத்திருக்கின்றனர் என்பது தெளிவாகிறது. தமிழ்நாட்டில் எங்களுடனான கூட்டணியில் அதிமுக மிகப்பெரிய இடத்தில் உள்ளது. முதலமைச்சர் மிகப்பெரிய கட்சியிலிருந்து வருவது இயற்கையானது. தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சர். ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமைதான் அறிவிக்கும்

தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் இணைந்து முடிவு செய்வார்கள் என சிடி ரவி கூறியதிலிருந்து, அவர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஒப்புக்கொள்ள மறுத்து உள்ளார் என்பது தெரிய வருகிறது. மேலும் மிகப்பெரிய கட்சியிலிருந்து முதல்வர் வருவது இயற்கைதான் என தெரிவித்துள்ளார். ஆக அதிமுகவிலிருந்து முதல்வரை அறிவிக்க விரும்பும் பாஜக, எடப்பாடி பழனிசாமியை ஏற்க மறுக்கிறது. அந்த இடத்தில் அதே கட்சியை சேர்ந்த மற்றொரு மூத்த அரசியல்வாதியை நிறுத்த நினைக்கிறது.