பின்வாங்கிய சசிகலா : பாஜகவின் சி.டி.ரவி பரபரப்பு பேட்டி!

 

பின்வாங்கிய சசிகலா : பாஜகவின் சி.டி.ரவி பரபரப்பு பேட்டி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வரும் அதிமுக, இட ஒதுக்கீடு, விவசாய கடன் தள்ளுபடி, பொதுத்தேர்வு என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க கூட்டணி அமைத்திருக்கும் பாஜக, தேமுதிக மற்றும் பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையையும் நடத்திக் கொண்டிருக்கிறது.

பின்வாங்கிய சசிகலா : பாஜகவின் சி.டி.ரவி பரபரப்பு பேட்டி!

கூட்டணியில் இருக்கும் பாஜக, வாக்குகள் சிதறாத வண்ணம் தடுக்க சசிகலா அதிமுக பக்கம் இழுக்க நிர்பந்தம் போட்டதாம். அதை அதிமுக ஏற்க மறுத்ததால், தற்போது கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. இதனிடையே, அரசியலில் இருந்து பின்வாங்கி எல்லாருக்கும் ஷாக் கொடுத்தார் சசிகலா. டிடிவி தினகரனுக்கே சசிகலாவின் இந்த முடிவு ஷாக் ஆகத் தான் இருந்ததாம். இதுமட்டுமில்லாமல், தினகரனையும் அரசியலில் இருந்து விலகிக் கொள்ளுமாறு சசிகலா கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இது அதிமுகவுடன் சசிகலா இணைவாரா? அமமுக அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா? போன்ற பல கேள்விகளுக்கு வழி வகுத்துள்ளது.

பின்வாங்கிய சசிகலா : பாஜகவின் சி.டி.ரவி பரபரப்பு பேட்டி!

இந்த நிலையில் சென்னை தி.நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, சசிகலா முடிவை பாஜக வரவேற்கிறது. ஜெயலலிதாவின் கனவு ஒருங்கிணைந்த அதிமுக தான். ஜெயலலிதாவின் கனவை அதிமுக பாஜக கூட்டணி நிறைவேற்றும். தினகரனும் அதை செய்வார் என எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

மேலும், தினகரன் அதிமுக வாக்குகளைப் பிரிப்பார் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இன்னும் காலம் இருக்கிறது என பதிலளித்தார். சி.டி.ரவியின் இந்த பேட்டி, அதிமுகவுடன் சசிகலாவும் தினகரனும் இணைய வாய்ப்பு இருப்பதையே வெளிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.