சசிகலா அதிமுக சேர்த்துக்கொண்டால் நாங்களும் சேர்த்துக்குவோம்- பாஜக சிடி ரவி

 

சசிகலா அதிமுக சேர்த்துக்கொண்டால் நாங்களும் சேர்த்துக்குவோம்- பாஜக சிடி ரவி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் நிர்வாகிகளுடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் சிடி. ரவி, தமிழகத்திற்கு பிரதமர் மோடி பல நல்ல திட்டங்களை தனது கைகளால் திட்டமிட்டுள்ளார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுத்தது காங்கிரஸ், ஆனால் பாஜக அதற்கு கொடுத்தது. இதிலிருந்தே தமிழகத்திற்கு யார் நண்பன், யார் எதிரி என தெரிந்துகொள்ளலாம். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழர்களின் நண்பன். பாஜகதான் தமிழர்களின் நண்பன். காங்கிரஸ் மற்றும் திமுக எதிரிகள். ஊழல், கடவுளை அவமதிப்பதுதான் திராவிட கலாச்சாரமா? பாஜக சட்டமன்ற தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடப்போகிறது என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. ஆனால் கட்டாயம் இரட்டை இலக்கத்தில் இடங்களை கேட்டுப்பெறுவோம்

சசிகலா அதிமுக சேர்த்துக்கொண்டால் நாங்களும் சேர்த்துக்குவோம்- பாஜக சிடி ரவி

தமிழகத்தில் அதிமுக கூட்டணியே மிகப்பெரியது. காங்கிரஸ் ஒரு ஊழல் கட்சி. நாட்டில் பெட்ரோல் உற்பத்தி என்பது அதிக அளவு இல்லை. அதனால் தான் விலை அதிகரிக்கிறது. 87 சதவீத எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. பெட்ரோல் விலையை உலக சந்தைகள்தான் தீர்மானிக்கின்றன. மூத்த தலைவர்களான ஈபிஎஸ், ஓபிஎஸ் தான் அதிமுகவை வழிநடத்துகின்றனர். சசிகலாவின் பலம் தற்போது குறைவே. சசிகலாவை கட்சியை சேர்ப்பது அதிமுகவின் உட்கட்சி விவகாரம். ஆனால் நாங்கள் அதிமுக பக்கம் உள்ளோம். அமமுகவை கூட்டணியில் சேர்ப்பதும் அதிமுக கையில்தான் உள்ளது” எனக் கூறினார்.