கடவுளை இழிவு செய்து பேசினால் கடலில் தூக்கி எறிவோம் – பாஜக சி.டி. ரவி

 

கடவுளை இழிவு செய்து பேசினால் கடலில் தூக்கி எறிவோம் – பாஜக சி.டி. ரவி

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மேலிட தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி, “தமிழ் கலாசாரம் வேறு இந்து கலாச்சாரம் வேறு அல்ல.இந்தியாவிலேயே கோவிலின் கோபுரத்தை லட்சணமாக கொண்டது தமிழகம் மட்டும் தான். தமிழ் கலாச்சாரத்தை ஒழிக்கும் முயற்சியில் திமுக முயற்சிக்கிறது. இனி தமிழகத்தில் கடவுளை இழிவு செய்து பேசினால் கடலில் தூக்கி எறிவோம். மான்கி பாத் நிகழ்வில் தமிழையும் திருக்குருளை உயர்வாக பேசிவரும் நரேந்திர மோடி தான் தமிழகத்திற்கு விரோதியா? ஜனதா தள, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் கர்நாடகத்தில் இருந்தபோது திருவள்ளுவருக்கு மரியாதை செய்ததே இல்லை.

கடவுளை இழிவு செய்து பேசினால் கடலில் தூக்கி எறிவோம் – பாஜக சி.டி. ரவி

குளச்சல் துறைமுகம்,தேசிய நெடுஞ்சாலை திட்டம்,ஸ்மார்ட் சிட்டி, என பல திட்டங்கள் தமிழகத்திற்கு கொண்டுவந்தது மத்திய பாஜக ஆட்சி. மத்திய அரசால் அதிகம் பலனடைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. இப்படி பல திட்டங்கள் கொண்டுவந்த பாஜக தமிழகத்தின் விரோதியா? தமிழகத்திற்கு உண்மையான நண்பனாக இருப்பது நரேந்திரமோடி தான். அரசின் பல்வேறு திட்டங்களை கொள்ளையடித்து கொண்டு சென்றது திமுக ஊழல் பெருச்சாளி.

பாஜக தமிழர்கள் கன்னடர்கள் என யாரையும் பிரித்து பார்த்ததில்லை. அனைவரும் பாரத்தின் புதல்வர்கள் தான், தமிழகத்தில் தமிழ் கலாச்சரத்தையும் தமிழ் பண்பாட்டையும் சீரழிக்கும் விரோத சக்திகளை அகற்றவே வெற்றிவேல் யாத்திரை. இனிமேல் தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிராக வாள் அவிழ்த்தால் வேலால் வெட்டி வீசுவோம்” எனக் கூறினார்.