தமிழகத்தில் காலூன்ற பாஜகவின் மாஸ்டர் பிளான்! தமிழக பொறுப்பாளராக களமிறக்கப்பட்ட சி.டி.ரவி

 

தமிழகத்தில் காலூன்ற பாஜகவின் மாஸ்டர் பிளான்! தமிழக பொறுப்பாளராக களமிறக்கப்பட்ட சி.டி.ரவி

பாஜகவின் தமிழக பொறுப்பாளராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சி.டி ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் சிக்மகளூவை சேர்ந்தவர் சி.டி. ரவி. இவர் 1967 இல் பிறந்தார். 2004, 2008,2013,2019 ஆகிய காலகட்டங்களில் தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினராக சிக்மங்களூரிலிருந்து தேர்வு செய்யப்பட்டார். கர்நாடகா பாஜகவின் இளைஞர் அணி தலைவர், கர்நாடகாவின் மாநில பொதுச்செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்த இவர், பாரதிய ஜனதா கட்சியில் இளைஞர்களை ஈர்க்கும் ஜாம்பாவானாகவும் இருந்துள்ளார். தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்து அவர்களுடன் நட்பு பாராட்டுவதில் சாமர்த்தியகாரர்.

தமிழகத்தில் காலூன்ற பாஜகவின் மாஸ்டர் பிளான்! தமிழக பொறுப்பாளராக களமிறக்கப்பட்ட சி.டி.ரவி

கர்நாடகாவின் பாஜக அரசாங்கத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர், சக்கரை துறைக்கான அமைச்சர் மற்றும் அண்மையில்(2019) கர்நாடகாவின் சுற்றுலா துறை அமைச்சர் ஆகிய பதவிகளை சி.டி. ரவி வகித்துள்ளார். இவரை பாஜகவின் தமிழக பொறுப்பாளராக கட்சி தலைமை அறிவித்துள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது தேர்தல் பொறுப்பாளராக இவர் நியமிக்கப்பட்டார். ஆழ்ந்த இந்துத்துவா கொள்கை கொண்டவர் சிடி.ரவி, தமிழக அரசியல் சூழ்நிலையை நன்கு அறிந்தவர், அதனால் அவருக்கு அந்த பொறுப்பு கொடுக்கப்பட உள்ளது.

தமிழக இளைஞர்களை பாஜக வசம் ஈர்க்கவே ரவி களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சி.டி. ரவி தான் சந்தித்த முதல் தேர்தலில் வெறும் ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். அதையே ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு அடுத்த தேர்தலில் 25,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் சிக்மங்களூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார் என்பது குறிப்பிடதக்கது.