தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என நடைபெற்ற போராட்டத்தில் பாஜக சி.டி.ரவி! வைரலாகும் புகைப்படம்

 

தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என நடைபெற்ற போராட்டத்தில் பாஜக சி.டி.ரவி! வைரலாகும் புகைப்படம்

கடந்த 2016 ஆம் ஆண்டு ‘காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்’ என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் பெரும் அளவில் போராட்டங்களும், கலவரங்களும் நடந்தன. அதேபோல் தமிழகத்திலும் போராட்டங்களும், அசம்பாவித சம்பவங்களும் நடந்தன. இரு மாநிலங்களிலும், ‘பந்த்’ உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றதால் அப்போது பதற்றமான சூழல் நிலவியது. தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழக பா.ஜ., முழு ஆதரவை தெரிவித்திருந்தது. அப்போதைய பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தமிழர்களின் உரிமையை, எந்த விதத்திலும் விட்டுத் தரக்கூடாது என்பதால் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.

இந்நிலையில் தற்போது தமிழக பாஜகவின் துணை தலைவராக இருக்கும் சிடி ரவி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்துக்கு எதிராக இருந்தவராக அறியப்படுகிறார். காரணம் தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என கர்நாடகா மாநிலம் கொப்பலா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜக சி.டி.ரவி கலந்துகொண்டிருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது. அப்போது போராட்டத்தில் கலந்துகொண்ட ரவி அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனைப்பார்த்த நெட்டிசன்கள் அன்று தமிழகத்துக்கு எதிராக இருந்துவிட்டு, இன்று தமிழக நலன்களை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார், பாஜகவினர் அனைவருமே நடிகர்கள், சந்தர்ப்பவாதிகள் என ஏசி வருகின்றனர்.