#CSKvRCB| வெற்றி பெற்ற சி.எஸ்.கே : பேட்ட டயலாக் சொல்லி அதிரடி கிளம்பிய சென்னை அணி வீரர்!

 

#CSKvRCB| வெற்றி பெற்ற சி.எஸ்.கே : பேட்ட டயலாக் சொல்லி அதிரடி கிளம்பிய சென்னை அணி வீரர்!

ஐ.பி.எல் போட்டியின் தொடக்கப் போட்டியில் விளையாடிய சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை: ஐ.பி.எல் போட்டியின் தொடக்கப் போட்டியில் விளையாடிய சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் தொடக்கப் போட்டி

virat dhoni

ஐ.பி.எல் தொடரின் தொடக்கப் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை காண ரசிகர்களின்  கூட்டம் மைதானத்தில் நிரம்பி வழிய,  டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி  பந்துவீச்சை தேர்வு செய்தார். 

தடுமாறிய பெங்களூர் அணி 

csk

இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க  வீரர்களான கேப்டன் விராட் கோலி(6), விக்கெட் கீப்பர் பர்த்திவ் பட்டேலும்(29)  சொற்ப ரன்களில் வெளியேறினர். அடுத்தடுத்து வந்த வீரர்களும் பெவிலியன் திரும்ப,  பெங்களூரு அணி 70 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்களையும், ஜடேஜா 2 விக்கெட்களையும், பிரவோ ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். 

வெற்றி பெற்ற சிஎஸ்கே 

இதை தொடர்ந்து 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய, சென்னை அணி ஆரம்பத்திலேயே  வாட்சன் விக்கெட் பறிகொடுத்து அதிர்ச்சியை கிளப்பியது. ஆனால்  அம்பாத்தி ராயுடு நிதானமாக விளையாடி வந்த நிலையில் ரெய்னா 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஐபிஎல் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா பெற்றார். இவரை அடுத்து ராயுடுவும் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இறுதியில் சென்னை அணி 17.4  ஓவர்களில் 71 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி ஐபிஎல் புள்ளி பட்டியிலில் ஒரு வெற்றியுடன்  முதலிடத்தை பிடித்துள்ளது.

எங்கள நீ தொட்டிருக்கக் கூடாது 

சென்னை அணி வெற்றியை தொடர்ந்து இம்ரான் தாகிர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘நீ திரும்பவும் எங்கள (சென்னை அணி) தொட்டிருக்கக் கூடாது. தொட்டுட்ட, தொட்டவன நாங்க விட்டதே இல்ல. தப்பு பண்ணீட்டயே சிங்காரம். முதல் அடி எப்பவும் இந்த பேட்டயோட அடி தான். எடுடா வண்டிய, போடுடா விசில’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்த வசனத்தை பேட்ட படத்தில் நவாசுதீனை பார்த்து ரஜினி பேசுவார். அதை இம்ரான் தாகிர் பதிவிட்டு பட்டையை கிளப்பியுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது ரஜினி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 

பிரபலங்கள் வருகை 

rajni

முன்னதாக சென்னையில் நடைபெற்ற  போட்டியை காண நடிகர் ரஜினிகாந்த், நடிகை வரலட்சுமி உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இதையும் படிங்க: சீதையாக நடித்த நயந்தாரா: பொது மேடையில் ஆபாசமாக விமர்சனம் செய்த நடிகர் ராதாரவி: அதிர்ச்சியில் ரசிகர்கள்!