438 நாட்களுக்கு பிறகு களம்கண்ட கூல் கேப்டன்! ரன் எடுக்காமல் போட்டி முடிவு! 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

 

438 நாட்களுக்கு பிறகு களம்கண்ட கூல் கேப்டன்! ரன் எடுக்காமல் போட்டி முடிவு! 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

தோனி வெறியர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கிடந்த ஐபிஎல் 2020 போட்டி ஐக்கிய அமீரகத்தில் போட்டி தொடங்கியது. 3 முறை ஐபிஎல் கோப்பையை தட்டி சென்ற சென்னை அணி ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இதற்காக கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே வீரர்கள், கொரோனா பரிசோதனை செய்துகொண்டு பயிற்சி எடுத்து வருகின்றனர். முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸை எதிர்கொள்கிறது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் டீம். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்து ஆட்டத்தை சிறப்பாக விளையாடியது. இதனால் மும்பை அணி 162 ரன்களை பெற்று ஆட்டமிழந்தது.

438 நாட்களுக்கு பிறகு களம்கண்ட கூல் கேப்டன்! ரன் எடுக்காமல் போட்டி முடிவு! 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சனும், முரளி விஜயும் களமிறங்கினர். எதிர்பார்த்த அளவு இருவருமே சிறப்பாக விளையாடவில்லை. 6 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினர். இதனையடுத்து களம் கண்ட டுபிளசிஸ் மற்றும் அம்பத்தி ராயுடு நிதானத்துடன் விளையாடி ஆட்டத்தை வெற்றிப்பாதை நோக்கி நகர்த்தினர். ராயுடு 72 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து டுபிளசிஸ் 58 ரன்கள் வரை எடுத்தார். இதையடுத்து பேட்டிங் செய்ய வந்த ஜடேஜா 10 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி வெளியெறினார். எப்போதும் போல இறுதியாக களமிறங்கிய கூல் கேப்டன் தோனி, ரன்கள் எதுவும் எடுக்காமல் அணியை வெற்றிப்பெற வைத்தார். சிஎஸ்கே அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 166 ரன்கள் எடுத்து மும்பை அணியை வீழ்த்தி வெற்றி வாகையை சூடியது.