CSK வெற்றி பெற்றது… ஆனால், தோனியின் முடிவுகள் சரிதானா?

 

CSK  வெற்றி பெற்றது… ஆனால், தோனியின் முடிவுகள் சரிதானா?

நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை த்ரில்லான ஒரு வெற்றியைப் பெற்றிருக்கிறது. தொடர் தோல்விகளுக்குப் பிறகு, இனி நீடிக்க வேண்டுமானால் வென்றே ஆக வேண்டும் என்பதாக ஆடியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 167 எனும் ஆவரேஜ் ஸ்கோரைத்தான் அடித்தது என்றாலும் பவுலிங்கில் அதை நிறைவு செய்து வெற்றியைப் பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

CSK  வெற்றி பெற்றது… ஆனால், தோனியின் முடிவுகள் சரிதானா?

எல்லோரின் பாராட்டுகளைப் பெற்று ‘கம் பேக் CSK’ என்றெல்லாம் கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்தப் போட்டியில் தேனி எடுத்த முடிவுகள் சரிதானா?

ஜெகதீசனை நீக்கி, ஸ்பின் பவுலர் பியூஷ் சாவ்லாவை அணியில் சேர்ந்திருந்தார் தோனி. பேட்டிங்கில் மாற்றம் பற்றியே பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் தோனியில் பவுலிங்கில் வலுப்படுத்த நினைத்தது ஆச்சர்யம். சாவ்லாவோடு சேர்த்து ஏழு பவுலர்கள்.

CSK  வெற்றி பெற்றது… ஆனால், தோனியின் முடிவுகள் சரிதானா?

சாம் கரணை ஓப்பனிங் இறக்கினார் தோனி. இந்த சீசன் தொடங்கியதுமுதலே சாம் கரணை எங்கே இறக்குவது என்பதுதான் சர்ச்சைக்கு உரியதாக இருக்கிறது. செகண்ட் டவுண் இறக்கினால், தோனி இறங்குவது தாமதமாகிறது. ஜடேஜா இறங்கவே முடியாமல் போய்விடுகிறது. சேஸிங்கில் பெரும் பிரச்னையாகி விடுகிறது. அதனால் துணிந்து சாம்கரணைத் ஓப்பனிங் இறக்கினார். அவரிடம் எதிர்பார்த்தது. இரண்டு சிக்ஸர் மற்றும் மூன்று, நான்கு பவுண்ட்ரிகள். அதைச் சிறப்பாகச் செய்தார். ஆனால், டூ பிளஸி டக் அவுட்டானது பெரிய ஷாக்.

CSK  வெற்றி பெற்றது… ஆனால், தோனியின் முடிவுகள் சரிதானா?

ராயுடு மற்றும் வாட்சன் பார்டன் ஷிப் ஓகே என்றாலும் இன்னும் கூடுதல் ரன்களை எடுத்திருக்கலாம். 38 பந்துகளுக்கு 42, 34 பந்துகளுகு 41 ரன்கள் என்பது டி20 போட்டியில் மிகக்குறைவே.

18 வது ஓவரை ஸ்பின்னருக்குக் கொடுக்க முடிவெடுத்தார் தோனி. அதுவும் ஒரு பக்கம் ஸ்பின் பால்களையும் நிதானித்து ஆடி வரும் கேன் வில்லியம்ஸ் இருக்கும் நிலையில். கரண் சர்மாவும் முதல் பந்தை பவுண்ட்ரிக்கு விரட்டினார். அடுத்த பந்தில் பெரிய ஷாட் அடிக்க ஆசைப்பட்டு தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆனாலும் ரஷித் கான் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி, நீதிம் ஒரு பவுண்ட்ரி என 19 ரன்களை விளாசினர். இதனால் வெற்றி ஹைதராபாத் பக்கம் சென்றுவிடும் சூழல் இருந்தது.

CSK  வெற்றி பெற்றது… ஆனால், தோனியின் முடிவுகள் சரிதானா?

ஆனால், மேட்ச் ஃபினிஷராக வில்லியம்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதுதான் வெற்றியை சென்னை பக்கம் கொண்டு வந்தது. இந்த ஓவரில் அவர் விக்கெட் விழா விட்டால் கேமே மாறியிருக்கக்கூடும். அந்த வகையில் கரண் சர்மாவுக்குக் கொடுத்தது சரியே. ஆனால், அவர் ஃபீல்ட்டிங் நிறுத்தப்பட்டதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பந்து வீசியது அபத்தம்.

ஸ்பின் பவுலரையே மீண்டும் பயன்படுத்தாமல் 19 வது ஓவருக்கு தாக்கூர், 20 ஓவருக்கு பிராவோ என தோனி எடுத்த முடிகளே வெற்றியே தேடித் தந்தன.

CSK  வெற்றி பெற்றது… ஆனால், தோனியின் முடிவுகள் சரிதானா?

இந்தப் போட்டியின் வெற்றியே தோனியின் முடிவுகள் சரி என்று சொல்ல வைப்பதாக தோன்றக்கூடும். உண்மையில் தோனி ஆப்ஷனே இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஜெகதீஷன், ருத்ராஜ் இருவரையுமே செகண்ட் டவுன் இறக்குவது பலனிக்காது என்பது வெளிப்படையானது. எனவே, இந்தப் போட்டியில் சிஎஸ்கே தோற்றிருந்தாலும் பெரிய அளவில் குறை சொல்ல முடியாது.

CSK  வெற்றி பெற்றது… ஆனால், தோனியின் முடிவுகள் சரிதானா?

ஆனாலும், இருக்கும் வீரர்களை யாரை எப்படிப் பயன்படுத்துவது… எப்படிப் பயன்படுத்தக் கூடாது என்பதை கேப்டன்கள் கற்றுக்கொள்ளும் பாடமாக சிஎஸ்கேவின் ஒவ்வொரு போட்டியும் அமைந்துவருகிறது என்பது மட்டும் உண்மை.