சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் : பிளே ஆஃப் செல்லும் கடைசி வாய்ப்பை தக்க வைக்குமா சென்னை அணி?

 

சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் : பிளே ஆஃப் செல்லும் கடைசி வாய்ப்பை தக்க வைக்குமா சென்னை அணி?

ஐபில் போட்டியில் இன்று சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 13வது சீசனில் இன்றைய 41வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 9 போட்டிகளில் 6 இல் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதேசமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 10 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பெற்றுள்ளது.

சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் : பிளே ஆஃப் செல்லும் கடைசி வாய்ப்பை தக்க வைக்குமா சென்னை அணி?

சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்து விளையாடும் 4 போட்டிகளிலும் வெற்றி பெறும் கட்டாயத்தில் உள்ளது. அப்படி வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல சிறிது வாய்ப்பிருக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் சென்னை அணி இன்று மும்பையில் தோல்வியைக் கண்டால், ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத அணிகள் பட்டியலில் முதல் அணியாக வெளியேறிவிடும். இதனால் இன்றைய போட்டியை காண சென்னை ரசிகர்கள் வழக்கம்போல் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் : பிளே ஆஃப் செல்லும் கடைசி வாய்ப்பை தக்க வைக்குமா சென்னை அணி?

அத்துடன் இந்தாண்டு சென்னை அணி போட்டியிருந்து வெளியேறினால் அடுத்த ஆண்டு ஐபிஎல்-இல் ஷேன் வாட்சன், பியூஷ் சாவ்லா, கேதார் ஜாதவ், இம்ரான் தாஹிர் ஆகியோருக்கான வாய்ப்பு மறுக்கப்படும் என்று கூறப்படுகிறது.