CSK வடிவேலு மீம்ஸ் செம ஹிட் – 37 ஆயிரம் லைக்ஸ்

 

CSK வடிவேலு மீம்ஸ் செம ஹிட் – 37 ஆயிரம் லைக்ஸ்

ஐபிஎல் கொண்டாட்டங்கள் தொடங்க இன்னும் ஆறே நாட்கள்தான் இருக்கின்றன.

முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது மும்பை இண்டியன்ஸ். சென்ற ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் இதே அணிகள்தான் மோதின.

அப்போது ஒரே ஒரு ரன்னில் வெற்றியை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ். அதனால் இந்த ஆண்டின் முதல் போட்டியே அதற்கு பதில் சொல்லும் விதமாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

CSK வடிவேலு மீம்ஸ் செம ஹிட் – 37 ஆயிரம் லைக்ஸ்

மற்ற அணிகளை விடவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கம் எப்போதுமே அப்டேட்டாக இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அனியை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டிருந்தாலும் அதை ‘தாராள’ மனத்தோடு தங்கள் பக்கத்தில் ஷேர் செய்வார்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் அட்மின்கள்.

திரையுலகின் சிறப்பான நகைச்சுவை நடிகர் வடிவேலு. அவரின் பிறந்த நாள் நேற்று. அதனால், வடிவேலுவை வைத்தே ஒரு மீம்ஸை உருவாக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்கள்.

CSK வடிவேலு மீம்ஸ் செம ஹிட் – 37 ஆயிரம் லைக்ஸ்

ரசிகர்கள் உற்சாகமாகவும் கிண்டல் செய்தும் பாராட்டியும் கமெண்ட் செய்துவருகிறார்கள். நேற்றும் இன்றும் பலரால் அந்த மீம்ஸ் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

கேப்டன் தோனியை நோக்கி வடிவேலு ஓடி வருவதான அந்த மீம்ஸில் வடிவேலு சொல்வதைப்போலவே அபுதாபியை  ’அபிதாபி’ என்று பதிவிட்டுள்ளனர்.

அந்த மீம்ஸ் 37 ஆயிரம் லைக்ஸ் கடந்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.