வலிமை அப்டேட்: அஜித் ரசிகர்களை சம்பவம் செய்த சிஎஸ்கே!

 

வலிமை அப்டேட்: அஜித் ரசிகர்களை சம்பவம் செய்த சிஎஸ்கே!

நடிகர் அஜித் தற்போது நடித்துவரும் படம் வலிமை. இப்படத்தின் அப்டேட் இன்னும் வெளிவராத நிலையில், ரசிகர்கள் எங்கு பார்த்தாலும் அப்டேட் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தொடங்கி பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் என அனைவரிடம் அப்டேட் கேட்டனர். கட்டங்கடைசியாக இங்கிலாந்து வீரர் மொயின் அலியிடமே அப்டேட் கேட்டுவிட்டனர்.

Image

இதனால் கோபமடைந்த அஜித் ரசிகர்களைக் கடுமையாகத் திட்டி அறிக்கை வெளியிட்டார். அதற்குப் பின்பே ரசிகர்கள் ஓரளவாவது அமைதியானார்கள். இச்சூழலில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி மொயின் அலியை ரூ.7 கோடிக்கு வாங்கியது.

இதுதொடர்பான பதிவில் சிஎஸ்கேவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் வலிமை அப்டேட்டை வைத்து அஜித் ரசிகர்களைக் கிண்டல் செய்துள்ளது. அப்பதிவில், “மொயின் அலி தற்போது நம்முடைய வீரர் ஆகிவிட்டார். இதுதான் வலிமை அப்டேட்” என்று சர்காஸ்டிக்காக சம்பவம் செய்துள்ளது. எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல சிஎஸ்கே அஜித் ரசிகர்களுக்கு வெறுப்பேற்றியுள்ளது. இதற்கு அவர்களின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.