சின்ன தல பேக் டூ சிஎஸ்கே… தமிழ் புலவர் ரிலீஸ் – யார் In, யார் Out

 

சின்ன தல பேக் டூ சிஎஸ்கே… தமிழ் புலவர் ரிலீஸ் – யார் In, யார் Out

சிஎஸ்கே அணி ரெய்னாவை தக்கவைத்துள்ளது. ஹர்பஜனோடு சேர்த்து மேலும் மூன்று சீனியர் வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலால் அரபு நாடுகளில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் நடைபெற்றது. மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெற்றாலும், அதற்கு இணையாக பரபரப்பான அனல் பறக்கும் ஆட்டங்களை அனைத்து அணி வீரர்களும் வெளிப்படுத்தினர்.

இச்சூழலில் இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவிலேயே நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது. மெகா ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், நாட்கள் பற்றாக்குறையால் மினி ஏலம் தான் பிப்ரவரியில் நடத்தப்படும் என்று தெரிவித்தது.

சின்ன தல பேக் டூ சிஎஸ்கே… தமிழ் புலவர் ரிலீஸ் – யார் In, யார் Out

அந்த ஏலம் நடைபெறுவதற்கு முன் ஒவ்வொரு அணியும் சில வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் (retain), சில வீரர்களை விடுவிக்கும் (release). அந்த வகையில் இந்தாண்டு விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை அறிவிக்கும் கடைசி நாள் இன்றாகும்.

சென்னை சூப்பர் சிங்ஸ் தவிர்த்து வேறு எந்த அணிகளும் நிறைய வீரர்களை விடுவிக்கவில்லை என்றே தெரிகிறது. கடந்த சீசனில் பெரிய வீரர்கள் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பது ஒரு காரணம். மற்றொரு காரணம் அந்த அணியிடம் தற்போது 15 லட்சம் மட்டுமே உள்ளது. இதைக் கொண்டு ஒரு வீரரைக் கூட ஏலம் எடுக்க முடியாது. இதனால் தான் அதிகமான வீரர்களை சிஎஸ்கே விடுவித்துள்ளது.

சின்ன தல பேக் டூ சிஎஸ்கே… தமிழ் புலவர் ரிலீஸ் – யார் In, யார் Out

கடந்த சீசனில் துபாய் சென்று சொந்த காரணங்களுக்காக இந்தியா திரும்பிய சின்ன தல ரெய்னாவை அணி தக்கவைத்துக் கொண்டுள்ளது. சென்னை அணி அவருடனான கான்டிராக்ட்டை முடித்துக்கொண்டுவிட்டது; புதிதாக உருவாகும் ஐபிஎல் அணிக்கு அவர் கேப்டனாக போகிறார் போன்ற பல்வேறு யூகங்கள் கிளம்பின. அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது இந்த அறிவிப்பு.

ரெய்னாவுடன், கேப்டன் தோனி, டூபிளெஸ்சிஸ், இளம் வீரர் சாம் கரண் ஆகியோரும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். ஹர்பஹன் சிங் சிஎஸ்கே உடனான கான்டிராக்ட் முடிந்ததாக இன்று ட்விட்டரில் உறுதிசெய்துவிட்டார். அவருடன் கேதார் ஜாதவ், பியூஷ் சாவ்லா, முரளி விஜய் ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சின்ன தல பேக் டூ சிஎஸ்கே… தமிழ் புலவர் ரிலீஸ் – யார் In, யார் Out

வாட்சன் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் ஓய்வுபெற்று விட்டார் என்பதால் அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சிஎஸ்கேவுக்கு 22 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.