Home விளையாட்டு கிரிக்கெட் கேப்டன் தோனியை நிரூபிக்க இன்று CSK வெற்றி பெறுவது அவசியம் #CSKvsDC #IPL

கேப்டன் தோனியை நிரூபிக்க இன்று CSK வெற்றி பெறுவது அவசியம் #CSKvsDC #IPL

ஐபிஎல் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்போடு போட்டிகள் நடைபெறுகின்றன. பல போட்டிகள் கடைசி ஓவர் வரை சஸ்பென்ஸோடு செல்கின்றன.

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு பலம் வாய்ந்த மும்பை இண்டியன்ஸ் மோதியது. அம்பத்தி ராயுடு நின்று அடித்து சென்னையை வெல்ல வைத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸின் இரண்டாம் போட்டியில் மோதியது ராஜஸ்தான் ராயல் அணியுடன். இதில் 16 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை ராஜஸ்தான் பெற்றது.

ராஜஸ்தான் அணியிடம் சென்னை தோற்றது குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தோனி மீது. ஏனெனில், 216 ரன்களை சேஸிங் செய்ய வேண்டும் என்ற நிலையில் பேட்டிங் ஆர்டரில் முறையாக தோனி கவனம் செலுத்த வில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

சர்ச்சைக்கு உரிய போட்டியில் ஓப்பனிங் இறங்கிய முரளி விஜய் 21, வாட்சன் 33 ரன்களோடு அவுட்டானார்கள். மூன்றாவதாக டூ பிளஸிஸ் இறங்கினார். நான்காவது இடத்தில் சாம் கரண் இறக்கப்பட்டார். அவர் 17 ரன்களோடு ஆட்டம் இழந்தார். இந்த இடத்தில் ஏன் இவரை இறக்க வேண்டும் என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர். அடுத்து ருத்ராஜ் டக் அவுட்டானார். ஜாதவ் 22 ரன்களோடு திரும்பி வந்தார். ஏழாவதாகவே தோனி இறங்கினார். பெரிய ஸ்கோர் உள்ள மேட்சில் அனுபவ வீரரான தோனி ஏழாவது இடத்தில் இறங்கியது தவறு என்கிறார்கள் முன்னாள் வீரர்கள்.

தோனி தவறான இடத்தில் இறங்கியதால்தான் அன்றைக்கு வெற்றிக்குப் போராடக்கூட முடியவில்லை என்றும் விமர்சனம் செய்தார்கள். ரவிந்திர ஜடேஜா 2 பந்துகள் மட்டுமே பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக், ‘மும்பை அணியுடனான மேட்சில் சாம் கரணை முன்கூட்டிய இறங்கியதைப் போல ராஜஸ்தான் மேட்சில் இறக்கியது தவறு. அதனால்தான் மிடில் ஆர்டரில் போதுமான ரன்ரேட் கிடைக்க வில்லை’ என்று தெரிவித்திருக்கிறார். மேலும், ’20 வது ஓவரில் தோனி அடித்த மூன்று சிக்ஸர்கள் அவரின் சொந்த ரன்களை அதிகரிக்கவே உதவும். தோனி முன்கூட்டியே இறங்கியிருக்க வேண்டும்’ என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

தோனியோ, ‘இளம் வீரர்களுக்கான வாய்ப்பாக அமையும் என்றே சாம் கரண் உள்ளிட்டோரை முன்கூட்டி களம் இறக்கி விட்டதாகக் கூறியிருக்கிறார். இப்படியான விமர்சனங்கள் தோனியின் முடிவுகள் மீதான நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.

எனவே, இன்றைக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்வதன் மூலமே தோனி எடுக்கும் முடிவுகள் பற்றிய கேள்விகளுக்குப் பதிலாகச் சொல்ல முடியும். அதற்கான முனைப்போடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஆடுவார்களா?

மாவட்ட செய்திகள்

Most Popular

மனுதர்ம நூலை தடை செய்ய கோரி விசிக ஆர்ப்பாட்டம்

பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை தடை செய்யகோரி, திண்டுக்கல்லில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வருமான வரி தாக்கல் செய்ய – டிசம்பர். 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 2018-19ம் நிதியாண்டுக்கான வருமான...

ராஜராஜனின் 1035ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா: பேரரசனுக்கு நன்றிக் கடன் செலுத்தப்படுமா?

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இராஜராஜன் பிறந்த நாள் விழாவான சதய விழா நாளை மறுதினம் 26.10.2020 திங்கட் கிழமை அன்று நடைபெறுகிறது. கொரோனா காலம் என்பதால் ஒருநாள் நிகழ்வாக விழாவை...

திருவள்ளூர்: குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு எதிராக அமைச்சரிடம் பொதுமக்கள் மனு

திருவள்ளூர் மாவட்டம் நூம்பல் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்ட எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் அமைச்சர் பென்ஜமினை சந்தித்து மனு அளித்தனர்.
Do NOT follow this link or you will be banned from the site!