“கோவைனா கெத்து இப்போ சென்னையோட சொத்து”

 

“கோவைனா கெத்து இப்போ சென்னையோட சொத்து”

ஐபிஎல் 14ஆவது சீசனுக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. ஏலத்தில் சிஎஸ்கேவின் ஒவ்வொரு மூவும் வியக்கவைத்தது. முதலில் 7 கோடிக்கு மொயின் அலியைத் தட்டித்தூக்கியது. அதன்பின் கிருஷ்ணப்பா கவுதமை 9.25 கோடிக்கு வாங்கியது. இதுகூட ஆச்சரியம் அளிக்கவில்லை. யாரும் எதிர்பாராவிதமாக கடந்த ஆறு சீசன் ஏலத்திலும் விலை போகாத புஜாராவை ஏலம் எடுத்தது ரசிகர்களை ஆச்சரியம் கலந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“கோவைனா கெத்து இப்போ சென்னையோட சொத்து”

இருப்பினும், தமிழக வீரர்களை சிஎஸ்கே தொடர்ந்து புறக்கணிப்பதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கோவையைச் சேர்ந்த தமிழக வீரர் ஹரி நிஷாந்தை 20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. ஏற்கனவே கோவையைச் சேர்ந்த ஜெகதீசன் அணியில் இருக்கிறார். இரண்டாவதாக ஹரி நிஷாந்த் இணைந்திருக்கிறார்.

“கோவைனா கெத்து இப்போ சென்னையோட சொத்து”

டிஎன்பிஎல்லில் ஹரி நிஷாந்த்தின் சிறப்பான ஆட்டத்தைப் பார்த்த தோனி அவரை ஏலத்தில் எடுக்க வலியுறுத்தியிருக்கிறார். தற்போது நடைபெற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரிலும் ஓபனிங் இறங்கி தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியிருக்கிறார். இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள சிஎஸ்கே ட்விட்டர் பக்கம், “மற்றொரு கோவை கெத்து இப்போ சென்னையோட சொத்து” என ட்வீட் செய்துள்ளது. கூடவே ஜெகதீசனையும் டேக் செய்து நிஷாந்துடன் இணைந்து ஆட தயாரா என்றும் கேட்டுள்ளது. தமிழக அணியில் ஜெகதீசனும் நிஷாந்தும் ஓபனிங் பார்ட்னர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“கோவைனா கெத்து இப்போ சென்னையோட சொத்து”

ஏலத்தில் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்ட பின் பேட்டியளித்த நிஷாந்த், “ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னால இப்ப வர இத நம்ப முடியல. ஜெகதீசன் ஏற்கனவே அணியில் இருக்குறது எனக்கு நிச்சயம் உதவியா இருக்கும். சிறு வயதிலிருந்தே நாங்க சேர்ந்து விளையாடியிருக்கோம். தோனிய பார்க்கனும்ங்கிறது என்னோட வாழ்நாள் கனவு. இப்போ அவரோட சேர்ந்து விளையாட போறோம்ன்றத நினச்சி கூட பார்க்க முடியல” என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.