திருச்சி- முகநூல் காதலியை நேரில் பார்க்க ஆசைப்பட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி! மோசடிப்பெண் கைது!

 

திருச்சி- முகநூல் காதலியை நேரில் பார்க்க ஆசைப்பட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி! மோசடிப்பெண் கைது!

முகநூலில் அறிமுகமான வாலிபரை திருச்சிக்கு வரவழைத்து அவரை அடித்து துவைத்து, ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்த பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட வாலிபர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த திருச்சி போலீசார் தப்பியோடிய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

திருச்சி- முகநூல் காதலியை நேரில் பார்க்க ஆசைப்பட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி! மோசடிப்பெண் கைது!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த வெற்றிச்செல்வன் என்பவரது மகன் வினோத் குமார் (வயது 31) . இவர், முகநூல் காதலியை நேரில் சந்திக்கும் ஆவலில் திருச்சிக்கு வந்து திருட்டு கும்பலிடம் சிக்கினார். 12 ம் வகுப்புவரை படித்த இவருக்கு திருமணமாகி குழந்தை ஒன்று உள்ளது. வெப்டிசைனராக பணியாற்றி வந்த வினோத்குமார் பலமணிநேரம் முகநூல், வாட்ஸ் அப்பில் மூழ்கி கிடப்பது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் கம்பெனி ஒன்றின் வெப் டிசைனில் ஈடுபட்டிருந்தபோது தனது முகநூல் கணக்கில் திருச்சியை சேர்ந்த ஒரு பெண் ஒருவர் நட்பு அழைப்பு விடுத்து ஆபாச படம் ஒன்றை அனுப்பி நண்பராக இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். சபலத்திற்கு ஆளான வினோத் குமார் அவரது அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

திருச்சி- முகநூல் காதலியை நேரில் பார்க்க ஆசைப்பட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி! மோசடிப்பெண் கைது!

இதனையடுத்து இருவரும் பரஸ்பரம் தாங்கள் குறித்த தகவல்களை பரிமாறிய நிலையில் ஒரு கட்டத்தில் வினோத் குமாரிடம் செல்போன் எண்ணை வாங்கிய நிஷா என்ற அந்த பெண் தனது தேனொழுகும் குரலில் பேச மயங்கிய மன்மதன் வினோத்குமார் அவரை காண வேண்டும் என்ற தனது ஆவலை வெளிப்படுத்தியுள்ளார் நிஷா. மேலும், வினோத்குமாரை கடந்த 5 ம் தேதி திருச்சிக்கு வருமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து அவர் தனது குடும்பத்தினரிடம் வேலை விசயமாக திருச்சிக்கு செல்வதாக பொய் மூட்டையை அவிழ்த்து விட்டு தனது முகநூல் காதலியை நேரில் பார்க்கும் ஆவலில் சினிமா பட கதாநாயகன் போல் தன்னை அலங்கரித்து கொண்டு, கூலிங் கிளாஸ் சகிதம் தனது இருசக்கர வாகனத்தில் புயலென புறப்பட்டு திருச்சி சென்றிருக்கிறார்.

திருச்சி சென்றதும் நிஷாவிற்கு போன் செய்துள்ளார் வினோத்குமார். அவரிடம், காஜாமலைக்கு வருமாறும் அங்குள்ள பள்ளி ஒன்றின் அருகில் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் நிஷா.

பள்ளி விடுமுறை என்பதால் ஆள் அரவமின்றி இருந்த அப்பகுதிக்கு வந்த வினோத்குமாரிடம் அங்கு மறைந்திருந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை மடக்கி பிடித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த பர்ஸ், ஸ்மார்ட் போன், ஏடிஎம் கார்டு மற்றும் அவரது இருசக்கர வாகனத்தை பறித்துக்கொண்டு ஓடியது.

இந்த திடீர் செயலால் செய்வதறியாது திகைத்து நின்ற வினோத்குமார் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

திருச்சி- முகநூல் காதலியை நேரில் பார்க்க ஆசைப்பட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி! மோசடிப்பெண் கைது!

நிஷாவின் போன் நெம்பரை வைத்து அவரை மடக்கி பிடித்த போலீசார், அவரிடம் தங்கள் பாணியில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நிஷா அனைத்து விபரங்களையும் கூறவே இதில் மூளையாக செயல்பட்ட முகமது யாசிர், ஆசிக் மற்றும் நிஷா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில் அஜீஸ், சித்திக், அன்சாரி ஆகிய 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.

கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் இந்திய தண்டனைச்சட்டம் 147, 342,294 , 364, 395, 397, 506(2)மற்றும் தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.