`தூக்க நிலைக்கு செல்ல வைத்தார்; ஜிம்னாஸ்டிக் வீராங்கனையிடம் பாலியல் சில்மிஷம்!’- எஸ்கேப் ஆன பயிற்சியாளர் கைது செய்த போலீஸ்

`தூக்க நிலைக்கு செல்ல வைத்தார்; ஜிம்னாஸ்டிக் வீராங்கனையிடம் பாலியல் சில்மிஷம்!’- எஸ்கேப் ஆன பயிற்சியாளர் கைது செய்த போலீஸ்

ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு மனஅழுத்தம் பயிற்சி கொடுக்க வந்த பயிற்சியாளர் பாலியல் சில்மிஷம் கொடுத்துள்ளார். சிறுமியின் தந்தையின் புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த பயிற்சியாளரை கைது செய்தனர்.

`தூக்க நிலைக்கு செல்ல வைத்தார்; ஜிம்னாஸ்டிக் வீராங்கனையிடம் பாலியல் சில்மிஷம்!’- எஸ்கேப் ஆன பயிற்சியாளர் கைது செய்த போலீஸ்

சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் கானாத்தூர் உத்தண்டி அருகே பங்களா வீட்டில் வசித்து வருபவர் பிரபல தொழிலதிபர். இவர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் கடந்த 10-ம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், “தனது 13 வயது மகள், நாவலூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் அவரது மகள் மாநில அளவில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக திகழ்ந்து வருவதாக தெரிவித்திருந்தார்.

தொடர்ச்சியாக பயிற்சி பெற்று வந்த அவர், கொரோனா ஊரடங்கால் பயிற்சி பெற முடியாமல் இருந்துள்ளார். வீட்டிலேயே தானாக பயிற்சி எடுத்து வந்தார். மேலும் அவர் மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சியையும் மேற்கொண்டு வந்தார். அதுவும் ஊரடங்கால் தடை பட்டது. மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சியையாவது, பயிற்சியாளரை வைத்து தொடர்ந்து கொடுக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதை அடுத்து திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த 42 வயதான மகேஷ் என்பவரை தனது மகளுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சி அளிக்க அமர்த்தினர்.

`தூக்க நிலைக்கு செல்ல வைத்தார்; ஜிம்னாஸ்டிக் வீராங்கனையிடம் பாலியல் சில்மிஷம்!’- எஸ்கேப் ஆன பயிற்சியாளர் கைது செய்த போலீஸ்

உத்தண்டி அருகே உள்ள சிறுமி வீட்டிற்கு தினமும் சென்று மகேஷ் பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி சிறுமிக்கு ரிலாக்சேஷன் உடற்பயிற்சியை மகேஷ் அளித்துள்ளார். அப்போது, சற்று உறக்க நிலைக்கு சிறுமி சென்றதை அடுத்து, அவருக்கு மகேஷ் பாலியல் தொந்தரவு கொடுக்கத் தொடங்கியுள்ளார். திடுக்கிட்டு எழுந்த சிறுமி, பயிற்சியாளர் மகேஷின் செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கத்தியுள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் பணியாளர்கள் பயிற்சி நடைபெற்ற இடத்திற்கு ஓடினர். அவர்களை பார்த்ததும் மகேஷ் அங்கிருந்து வெளியேறி, தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பிவிட்டார். புகாரின் பேரில் மகேஷை அடையாறு அனைத்துமகளிர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.