“தொட்டதை வெளியே சொன்னால் சுட்டுடுவேன்”-மாடு மேய்த்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த போலீஸ் ..

மாடு மேய்க்க சென்ற ஒரு ஆதிவாசி பெண்ணை அங்கு முகாமிட்டு தங்கியிருந்த CRPF போலீஸ் பலாத்காரம் செய்ததால், பழங்குடியின மக்களிடையே கொதிப்பலை உண்டாகியுள்ளது.

The Adivasi Mahasabha has also demanded strict action against the accused.

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள ஒரு வனப்பகுதியில் CRPF போலீஸ்காரர் ஒருவர் அவரின் முகாமில் தங்கியிருந்தார்.அப்போது கடந்த வியாழக்கிழமையன்று அந்த பகுதியை சேர்ந்த ஒரு ஆதிவாசி பெண் மாடுமேய்க்க அந்த காட்டுக்குள் சென்றார் .அப்போது அந்த பழங்குடியின பெண்ணை பார்த்த அந்த போலீஸ்காரருக்கு ஆசை வந்தது .இதனால் அந்த பெண்ணை அந்த முகாமுக்கு கூப்பிட்டார் .அவர் கூப்பிட்டதும் அந்த பெண் உடனே ஓடிவந்தார் .அப்போது அந்த போலீஸ் அந்த பெண்ணை தன்னுடைய முகாமுக்குள் இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார் . பிறகு அந்த பெண்ணிடம் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என்று மிரட்டி அனுப்பியுள்ளார் .
இதனால் பயந்து போன அந்த பெண் அந்த விஷயத்தை வெளியே யாரிடமும் சொல்லாமல் வீட்டில் அழுது கொண்டே இருந்தார் . மறுநாள் அவரின் தாயார் மகள் அழுவதை பார்த்து ,அவரின் சகோதரிடம் விசாரிக்க சொன்ன போது ,அந்த பெண் அவரின் சகோதரரிடம் போலீஸ்காரர் தன்னை பலாத்காரம் செய்த விஷயத்தை கூறினார் .
இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் அந்த போலீஸ் மீது புகாரளித்தனர் .புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அந்த CRPF போலீசை கைது செய்தது.பிறகு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது .
பலாத்காரம் செய்த போலீஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதிவாசி மகாசபா கோரியுள்ளது.

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...