சி.ஆர்.பி.எப். தேர்வு: தமிழகத்தில் ஒரு மையம் கூட இல்லை!

 

சி.ஆர்.பி.எப். தேர்வு: தமிழகத்தில் ஒரு மையம் கூட இல்லை!

மத்திய அரசின் சி.ஆர்.பி.எப். தேர்வுக்கு தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட தேர்வு மையம் அமைக்கப்படவில்லை என வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய ரிசர்வ் காவல் படையின்( CRPF) 780க்கும் மேற்பட்ட துணை மருத்துவ காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இதற்கான விண்ணப்பம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், எழுத்துத் தேர்வு வரும் டிசம்பர் மாதம் 20ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், இந்த தேர்வுக்காக நாடு முழுவதும் 9 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது. அதில் ஒரு இடம் கூட தமிழகத்திலும் புதுச்சேரியிலும் இல்லை.

சி.ஆர்.பி.எப். தேர்வு: தமிழகத்தில் ஒரு மையம் கூட இல்லை!

இது குறித்து வெங்கடேசன் எம்.பி மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் சி.ஆர்.பி.எப் இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘கொரோனா காலக்கட்டத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதே கடினமாக இருக்கிறது. தமிழகத்தில் தேர்வு மையங்கள் இல்லாததால் விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர்.

சி.ஆர்.பி.எப். தேர்வு: தமிழகத்தில் ஒரு மையம் கூட இல்லை!

அதனால் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் தலா ஒரு தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்றும் விண்ணப்பங்கள் அறிவிக்க தாமதம் ஆனதால் மீண்டும் மறுஅறிவிப்பு வெளியிட்டு விண்ணப்பங்களை பெற வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.