தடையை மீறி கடற்கரையில் குவிந்த மக்கள் : கொரோனா அதிகரிக்கும் அபாயம்!

 

தடையை மீறி கடற்கரையில் குவிந்த மக்கள் : கொரோனா அதிகரிக்கும் அபாயம்!

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி சென்னை கடற்கரைகளில் மக்கள் நேற்று கூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தடையை மீறி கடற்கரையில் குவிந்த மக்கள் : கொரோனா அதிகரிக்கும் அபாயம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மாதமாக இருந்தது போல் இல்லாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் சென்னையிலும் கொரோனா பரவல் உயர்ந்தே காணப்படுகிறது. இதனால் சென்னை மாநகராட்சியின் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா 3ஆம் அலையை தடுக்கும் நடவடிக்கையாக கடற்கரைக்கு செல்ல அனுமதி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தடையை மீறி கடற்கரையில் குவிந்த மக்கள் : கொரோனா அதிகரிக்கும் அபாயம்!

இந்நிலையில் சென்னை மாநகராட்சி கடற்கரைக்கு செல்ல தடை விதித்துள்ள நிலையில் மெரினா, பெசன்ட் நகர் போன்ற முக்கிய கடற்கரைப் பகுதிகளில் காவல்துறையினர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் குறைவாக இருந்த பட்டினப்பாக்கம் உள்ளிட்ட சிறிய கடற்கரைகளுக்கு மக்கள் நேற்று கூட்டம் கூட்டமாகச் சென்றனர். இதில் பலரும் முக கவசம் அணியாமல் தனிமனித இடைவெளியில்லாமல் கடற்கரையில் விளையாடி மகிழ்ந்தனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.