மழையால் சேதமடைந்த பயிர்கள்: வயலில் இறங்கி பார்வையிட்ட முதல்வர்!

 

மழையால் சேதமடைந்த பயிர்கள்: வயலில் இறங்கி பார்வையிட்ட முதல்வர்!

புரெவி புயல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தென் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட புரெவி புயல், வலுவிழந்து ஒரே இடத்தில் ஒரு நாளுக்கு மேலாக மையம் கொண்டதால் கனமழை வெளுத்து வாங்கியது.

மழையால் சேதமடைந்த பயிர்கள்: வயலில் இறங்கி பார்வையிட்ட முதல்வர்!

தொடர் மழையால் கடலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரக் கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இந்த நிலையில், இன்று காலை நாகை மாவட்டத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி முகாம்களில் தங்கி இருந்த மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். இதைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்துக்கு சென்ற முதல்வர் மழை பாதிப்படைந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார்.

மேலும், திருத்துறைப்பூண்டி அருகே கொக்காலடியில் தண்ணீரில் மூழ்கிய பயிர்களை வயலில் இறங்கி பார்வையிட்ட முதல்வர் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவியும் வழங்கினார்.