பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீது இன்று முதல் விநியோகம்!

 

பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீது இன்று முதல் விநியோகம்!

பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீது இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. இதை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீது இன்று முதல் விநியோகம்!

கடந்த 5 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாசித்தார். அப்போது சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், கொரோனா, புயல் மற்றும் கடும் மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் . இதனால் தமிழக விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் விதமாக ரூ.12, 110 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். ஏற்கனவே 2016 ஆம் தேதி விவசாயக்கடனை அதிமுக அரசு தள்ளுபடி செய்த நிலையில் இரண்டாவது முறையாக விவசாய கடனை தள்ளுபடி செய்தது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீது இன்று முதல் விநியோகம்!

இந்நிலையில் பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீதை விவசாயிகளுக்கு வழங்குவதை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். 16.34 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி என பேரவையில் முதல்வர் பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்தார். இதை தொடர்ந்து பயிர்க்கடன் தள்ளுபடிக்கண் அரசாணை வெளியான நிலையில் இன்று முதல் விவசாயிகளுக்கு ரசீது விநியோகிக்கப்படவுள்ளது.