பிரபல கால்பந்து நட்சத்திரமான ரொனால்டோவுக்கு கொரோனா!

 

பிரபல கால்பந்து நட்சத்திரமான ரொனால்டோவுக்கு கொரோனா!

கொரோனாவின் தாக்கத்தால் உலகமே பீதியடைந்து வருகிறது. கொரோனா தொற்று 4 கோடியை நெருங்கி வருகிறது. அதேபோல கொரோனா நோய் பாதித்து சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த பத்து மாதங்களுக்காக உலகமே கொரோனாவால் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரமாகப் பின்பற்றி வருகின்றனர். கொரோனா நோய்த் தொற்றால் ரசிகர்கள் மைதானத்திற்கு வர முடியாது என்பதாலும், ஆடுபவர்களுக்கும் நோய்த் தொற்று ஆகிவிடும் என்பதாலும் பல விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. சில போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சில போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்றுவருகின்றன.

பிரபல கால்பந்து நட்சத்திரமான ரொனால்டோவுக்கு கொரோனா!

இந்நிலையில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 1985-ஆம் ஆண்டு பிறந்த ரொனால்டோ தேசிய கால்பந்து அணியிலும், ஜுவென்டஸ் கால்பந்து க்ளப் அணிக்காகவும் விளையாடி வருகிறார். போர்ச்சுக்கல் நாட்டின் மதீரா என்னும் சிறிய தீவில் தன்னுடைய பெற்றோருக்கு நான்காவது குழந்தையாக ரொனால்டோ பிறந்தார். ரொனால்டோவுக்கு 4 வயது ஆனபோது அவரது தந்தை கால்பந்து விளையாட கற்றுக் கொடுத்தார். அந்த விளையாட்டு ரொனால்டோவுக்கு மிகவும் பிடித்துப் போக, கால்பந்து விளையாட்டில் கில்லி ஆகி 8 வயதிலேயே உள்ளூர் கால்பந்து கிளப் அணிக்காக ரொனால்டோ ஆடத் தொடங்கி விட்டார். காலப்போக்கில் கால்பந்து பிரபலமாக உருவெடுத்த ரொனால்டோ தன் கடின உழைப்பால் ஸ்போர்டிங் லிஸ்பன் அணிக்காக U-16 அணி, U-17 அணி, U-18 அணி என முன்னேறி, சீனியர் அணியிலும் இடம்பெற்றார்