காவல் நிலையத்தில் வழுக்கி விழும் குற்றவாளிகள்..சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க நோட்டீஸ்!

சென்னை காவல்நிலைய குளியலறையில் குற்றவாளிகள் தொடர்ந்து வழுக்கி விழுந்த சம்பவம் நடந்து வந்துள்ளது. இதனால் குற்றவாளிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் ஜார்ஜ் மில்லருக்கு எதிராக தேவேந்திரன் என்பவரை புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் தேவேந்திரனை விசாரிக்க காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற போது அவர் வழுக்கி விழுந்து விட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதனால் சென்னை மாநகர காவல் நிலையங்களில் உள்ள குளியலறையில் வழுக்கி விழுந்தது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இது போன்ற சம்பவங்கள் முன்னதாக நடந்துள்ளதா என்றும் குளியலறையை பராமரிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் அதனைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் பதில் அளிக்குமாறு குறிப்பிட்டுள்ளது.

Most Popular

ஆசைவார்த்தை… 9 மாதமாக உல்லாசம்… கர்ப்பமான 13 வயது சிறுமி!- போக்ஸோவில் சிக்கிய இளைஞர்

ஆசைவார்த்தை காட்டி 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை காவல்துறையினர் போக்ஸோவில் கைது செய்தனர். மயிலாடுதுறை அருகே திருவெண்காடு பஞ்சந்தாங்கி தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் அருண் (26). டைல்ஸ் வேலை பார்த்து...

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை...

ஒருபக்கம் கடன்காரர்களின் டார்ச்சர் மறுபக்கம் மாமியாரின் தொல்லை… கணவனின் இறப்பால் உயிரை மாய்த்த மனைவி… உயிருக்கு போராடும் மகள், மகன்கள்!

தேவகோட்டை அருகே கணவன் இறந்த நிலையில் கடனை கட்டச்சொல்லி டார்ச்சர் செய்ததால் வேதனை அடைந்த மனைவி, மூன்று பிள்ளைகளுடன் விஷம் குடித்தார். இதில் தாய் உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் பிள்ளைகள் உயிருக்கு போராடி...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது!

இன்றைய ராசிபலன்கள் 05-08-2020 (புதன்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 வரையில் மாலை 4.45 முதல் 5.45 வரையில் ராகு காலம் :  காலை 12.00 மணி முதல் 1.30 வரையில் எமகண்டம் : காலை 7.30...