போலி இ-பாஸ் பயன்படுத்தினால் கிரிமினல் வழக்குப் போடப்படும் – காவல்துறை எச்சரிக்கை!

 

போலி இ-பாஸ் பயன்படுத்தினால் கிரிமினல் வழக்குப் போடப்படும் – காவல்துறை எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதாவது ஒரு மாவட்டத்திற்குள் செல்வதற்கு இ-பாஸ் தேவை இல்லை என்றும் பிற மாவட்டங்களுக்குச் சென்று வர பாஸ் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதே போல மற்ற மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களும் இ-பாஸ் பெற்றுக் கொண்டு தான் வர வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. இதனிடையே போலியான இ-பாஸ் பெற்றுச் செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அவ்வாறு போலியான இ-பாஸ் பெற்று மக்கள் செல்வது கண்டுபிடிக்கப் பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போலி இ-பாஸ் பயன்படுத்தினால் கிரிமினல் வழக்குப் போடப்படும் – காவல்துறை எச்சரிக்கை!

இந்த நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் கண்ணன், ஆட்டோ, லாரி, கால் டாக்சி ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய அவர், கொரோனாவை தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் போலி இ-பாஸ் மூலம் சென்றால் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் கூறினார். மேலும், ஊரடங்கை மீறியதாகப் பிடிபட்ட வாகனங்கள் நாளை கொடுக்கப்படும் என்றும் கூறினார்.