‘நீங்க பணத்தோடு வந்தா,நாங்க குழந்தையோடு வருவோம்’ -குடிக்க பணமில்லாததால் அக்கா மகளையே கடத்தி பிளாக் மெயில் செய்த வாலிபர் ..

‘நீங்க பணத்தோடு வந்தா,நாங்க குழந்தையோடு வருவோம்’ -குடிக்க பணமில்லாததால் அக்கா மகளையே கடத்தி பிளாக் மெயில் செய்த வாலிபர் ..

குடிக்கவும் ,ஊரைசுற்றவும் பணமில்லாத ஒரு வாலிபர் தன்னுடைய உறவினரின் குழந்தையை கடத்தி பணம் கேட்ட விவகாரத்தால் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர் .

உத்தரபிரதேசத்தின் நொய்டாவில், செவ்வாயன்று, பிரிவு 73 இல் உள்ள சர்பாபாத் கிராமத்தில் வசிக்கும் சந்தீப் யாதவ் என்பவரின் இரண்டு வயது குழந்தை வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தது .அப்போது அதே வீட்டிலிருக்கும் குழந்தையின் தாய் மாமா 20 வயது பியூஷ் யாதவ் அந்த குழந்தையை தன்னுடைய பைக்கில் உக்காரவைத்து ,தன்னுடைய இரண்டு நண்பர்களின் உதவியோடு ஒரு பார்க்குக்கு கடத்தி சென்றார் .

‘நீங்க பணத்தோடு வந்தா,நாங்க குழந்தையோடு வருவோம்’ -குடிக்க பணமில்லாததால் அக்கா மகளையே கடத்தி பிளாக் மெயில் செய்த வாலிபர் ..
பிறகு தன்னுடைய மாமா சந்தீப்புக்கு போன் செய்து ,உங்களின் குழந்தையை கடத்தி விட்டோம் ,குழந்தை உயிரோடு வேண்டுமென்றால் சில லட்சங்களை எடுத்துக்கொண்டு நாங்கள் சொல்லும் இடத்திற்கு வரவேண்டுமென்று மிரட்டி போனை வைத்து விட்டார்
உடனே சந்தீப் போலிஸுக்கு போன் செய்து தன்னுடைய குழந்தையை யாரோ கடத்தி வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுவதாக புகாரளித்தார் .புகாரை பெற்ற போலீஸ் ஏதோ மிகப்பெரிய கடத்தல் கும்பலின் வேலை இது என்று வலை வீசி, நகர் முழுவதும் தேடினார்கள்.ஆனால் குழந்தை ஒரு பார்க்கில் கண்டெடுத்தனர் .பிறகு குழந்தையை கடத்திய அவரின் மைத்துனர் மற்றும் மேலும் இருவரை கைது செய்து விசாரித்த போது ,தங்களுக்கு குடிக்க மற்றும் ஊர் சுற்ற பணமில்லாததால் இப்படி அக்கா மகளையே கடத்தியதாக கூறினார்கள் .பிறகு அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை சிறையிலடைத்தனர்

‘நீங்க பணத்தோடு வந்தா,நாங்க குழந்தையோடு வருவோம்’ -குடிக்க பணமில்லாததால் அக்கா மகளையே கடத்தி பிளாக் மெயில் செய்த வாலிபர் ..