மதுஅருந்த பணம் தராததால் இளைஞர் கொலை- மர்மநபர்கள் வெறிச்செயல்

மதுஅருந்த பணம் தராததால் இளைஞர் கொலை- மர்மநபர்கள் வெறிச்செயல்

கோவை

கோவையில் மதுக்குடிக்க பணம் வழங்காத இளைஞரை, மர்மநபர்கள் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுஅருந்த பணம் தராததால் இளைஞர் கொலை- மர்மநபர்கள் வெறிச்செயல்

கோவை எஸ்.ஐ.எஸ்.ஹெச் காலனியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் இன்று அதிகாலை வீட்டின் அருகே நடந்து சென்றபோது 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, மது அருந்த பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது, விக்னேஷ் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் விக்னேஷின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடினர். விக்னேஷின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற பொதுமக்கள், அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு விக்னேஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மதுஅருந்த பணம் தராததால் இளைஞர் கொலை- மர்மநபர்கள் வெறிச்செயல்

இதுகுறித்த தகவலின் பேரில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பீளமேடு போலீசார், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.