இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை -தப்பியோடியது மர்ம கும்பல்

 
kஒ

பைக்கில் சென்ற இளைஞரை வழிமறித்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளது.  இதனால் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது .

திருவாரூர் மாவட்டத்தில் காட்டூர் அகரத்திருநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன்.   27 வயதான இளைஞர் காணூர்  பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்.   அப்போது கிடாரங்கொண்டான் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த  மர்ம கும்பல் பைக்கை வழிமறித்து கடுமையாகத் தாக்கியிருக்கிறது.  

ட்

 சரமாரியாக வெட்டி ரத்தவெள்ளத்தில் சாய்த்து விட்டு தப்பியோடி இருக்கிறது.   ரத்த வெள்ளத்தில் கிடந்த குமரேசன் உடலைப் பார்த்துவிட்டு அப்பகுதியினர் அளித்த தகவலின்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு சென்று குமரேசன் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளார்.

 இந்த கொலை சம்பவம் குறித்து திருவாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்த கும்பலை தேடி வருகின்றனர்.  முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.