"அடிப்பாவி!ஆசைய நிறைவேத்தலேனு ஆசிடை ஊத்தி .." -கல்யாணமான காதலியால் காதலனுக்கு நேர்ந்த கதி

 
marriage


கல்யாணமான காதலியை கட்டிக்க மறுத்த காதலன் மீது ஆசிடை வீசிய பெண்ணை போலீஸ் கைது செய்தது 

acid
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 27 வயதான  அருண்குமாருக்கும் ஷீபா என்பவருக்கும் பேஸ்புக் மூலம் காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி சமூக ஊடகம் மூலம் தங்களின் காதலை வளர்த்து கொண்டனர் .அதன் பிறகு அவர்கள் இருவரும் ஒரு நாள் நேரில் சந்தித்து பேச முடிவு செய்து அதற்கு ஒரு இடத்தை தேர்வு செய்தனர் .
பிறகு அந்த காதலி  ஷீபா ஏற்கனவே திருமாணவர் என்றும் இவருக்கு 2 குழந்தைகள் உள்ளது என்றும் அவரின் காதலனுக்கு தெரிய வந்துள்ளது . இதனால் அந்த காதலியுடனான உறவை முறித்து கொள்ள காதலன் அருண்குமார் முயற்சித்தார். இதனால் அந்த அருண்குமார் அந்த பெண்ணின் போனை கூட எடுக்கவில்லை .அதனால் இது  இருவருக்கும் இடையே மோதலாக வெடித்தது. இந்நிலையில் ஷீபா அந்த காதலை முறித்துக்கொள்ள அருணிடம்  பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இது தொடர்பாக ஒரு கோவிலில் இருவரும்  சந்திக்க வந்தபோது ,காதலன் அருண்குமார் மீது ஷீபா மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அவரது முகத்தில் வீசினார். இதில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அருண் சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதலில் இவரது கண் பார்வை இழக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷீபாவை கைது செய்தனர்.