"மாமனார் மாமியாரை நாற்காலியில் கட்டி வைத்து ..."கள்ளகாதலால் மருமகள் செஞ்ச கொடுமை

 
love


கள்ள உறவை தட்டி கேட்ட மாமியார் மற்றும் மாமனாரை கொளுத்திய மருமகள் மற்றும் அவரின் காதலரை போலீஸ் கைது செய்தது .

Representational image of crime scene
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் வயதான தம்பதிகளான மஞ்சித் சிங் மற்றும் அவரது மனைவி குர்மீத் கவுர் ஆகியோர் தங்களின்  மகன் ரவீந்தர் சிங்கோடு வசித்து வந்தனர் .அந்த தம்பதிகள் தங்களின் மகனுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்தனர் .அந்த வீட்டுக்கு வந்த அந்த மருமகளுக்கு அதே பகுதியில் உள்ள ஒரு நபருடன் கள்ள உறவு ஏற்பட்டது .இந்த விஷயம்  அந்த வீட்டில் வசிக்கும் வயதான மாமியார் ,மாமனாருக்கு தெரிந்து விட்டது .அதனால் அவர்கள் இது பற்றி அந்த மருமகளிடம் கேட்டு .அவரை கண்டித்தனர் .
அதனால் அந்த மருமகளும் அவரின் காதலனும் அந்த வயதான தம்பதிகளை கடந்த ஜனவரி 1ம் தேதி இரவு,நாற்காலியில் கட்டி வைத்து  தீ வைத்து கொளுத்தி விட்டனர் .அந்த தீயில் கருகி அந்த இருவரும் இறந்து கிடந்தனர் .அதன் பின்னர் அந்த மருமகள் அவரின் காதலனோடு அங்கிருந்து நகை பணத்தை எடுத்து கொண்டு தப்பியோடிவிட்டார் .பின்னர் அன்று இரவு வீட்டுக்கு வந்த அவர்களின் மகன் ரவீந்தர் சிங் தன் பெற்றோர் தீயில் கருகி இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியுற்றார் .இதனால் அவர் அங்குள்ள போலீசில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிந்து அங்கிருந்து கொலை செய்து விட்டு தப்பியோடிய  காதலர்கள் இருவரையும்  கைது செய்தனர் .பிறகு அவர்களிடமிருந்து நகை பணத்தையும் போலிசார்  மீட்டனர்