"அப்பப்ப அபார்ஷன் மாத்திரை கொடுத்து .."க்ரெடிட் கார்டு விக்க வந்தவரிடம் சிக்கிய பெண் .

 
rape


க்ரெடிட் கார்டு விற்க வந்தவரால் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது 

Gujarat: Woman raped, forced to swallow abortion pills by bank worker in Surat [Representative image]
குஜராத்தின் சூரத்தில் வசிக்கும் 29 வயதான ஹேமச்சந்திர தயாமா  என்ற நபர், க்ரெடிட் கார்டு விற்கும் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார் .இவருக்கு கல்யாணமாகி குழந்தைகள் இருக்கிறது .இவர் சில மாதங்களுக்கு முன்பு பண்டசரா பகுதியில் வசிக்கும்  இன்டீரியர் டிசைனராக இருக்கும் 26 வயதான பெண்ணிடம் க்ரெடிட் கார்டு விற்க தொடர்பு கொண்டு பேசினார் .பின்னர் இருவரும் அடிக்கடி நட்பை வளர்த்து கொண்டனர் .அப்போது அந்த தயாமா அந்த பெண்ணிடம் தனக்கு இன்னும் கல்யாணமாகவில்லை  என்று கூறியதால் அந்த பெண் அவரை காதலிக்க தொடங்கினார் .
பின்னர் அந்த நபர் அந்த பெண்ணை அடிக்கடி அங்குள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார்  .இதன் விளைவாக அந்த பெண் கர்ப்பமானார் .அப்போது அந்த நபர் அபார்ஷன் மாத்திரை கொடுத்து அந்த கருவை கலைத்துள்ளார் .பின்னர் அந்த பெண் அவரை பற்றி விசாரித்த போது ,அவர் ஏற்கனவே கல்யாணமானவர் என்று கண்டுபிடித்துவிட்டார் .இதனால் தான் ஏமாற்றபட்டதை உணர்ந்த அந்த பெண் அந்த நபர் மீது போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து  விசாரித்து வருகின்றனர் .