"புருஷனால ஒரு பிரயோஜனமும் இல்லே " -தூங்கிய கணவனை ஒரு மனைவி என்ன செஞ்சார் தெரியுமா ?

 
murder


கணவனை கொலை செய்து விட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடிய மனைவியை போலீஸ் கைது செய்தது .

Woman killed her husband [Representative image]
உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகரில்  மாவட்டத்தின் திதிஹாட் பகுதியில் உள்ள சின்பட்டா கிராமத்தில் வசிக்கும் 35 வயதான குந்தன் சிங் தாமி என்பவர் த்னது 30 வயது நீமா தேவி என்ற மனைவியுடன் வசித்துவந்தார் .இந்த தம்பதிகளுக்குள் அடிக்கடி  சண்டை வந்துள்ளது .இதனால் அந்த பெண் கடந்த அக்டோபர் 17ம் தேதியன்று இரவு அவரின் கணவரை அடித்து உதைத்து ,அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்தார் .அதன் பிறகு அவரின் உடலை வீட்டின் மாடியிலிருந்து வீசி விட்டு சென்று விட்டார் .
அதன் பிறகு தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார் . இருப்பினும், இறந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது மரணத்தில் தவறு நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று கன்டுபிடிக்கப்பட்டது .பின்னர் அவரின் சகோதரர் , இறந்தவரின்  மனைவி மீது கொலை செய்து  விட்டதாக  புகார் கொடுத்தார் .பின்னர் போலீசார் அந்த நீமாவை கைது செய்து விசாரித்த போது  அவர் கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதும் அவரை போலீஸ் கைது செய்தது .