"ஆறு வயது சிறுவனை கடத்திய புது மண தம்பதிகள்" -என்ன காரணம்னு தெரிஞ்சா கதறுவீங்க .

 
marriage


காதல் திருமணம் செய்தவர்களை பிரித்து வைத்த கோவத்தில் உறவினர் மகனை கடத்திய காதல் தம்பதிகளை போலீஸ் கைது செய்தது  .

Panvel: Woman kidnaps cousin to teach family lesson for not accepting husband
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பன்வெல் பகுதியில் வசிக்கும் ஷாலு சிங் என்ற 20 வயதான பெண், 21 வயதான விபின் ஹரிலால் அக்ரஹாரி என்பவரை தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராக சில  மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் முடிந்த உடனேயே, அந்த பெண்ணின் குடும்பத்தினர் அந்த பெண்ணை கணவரிடமிருந்து பிரித்து  நவி மும்பையில் உள்ள அவரது மாமா வினய் சிங் வீட்டிற்கு அனுப்பி விட்டனர் .இதனால் கோபமுற்ற அந்த புது மண தம்பதிகள்,தங்களை பிரித்தவர்களை பழி வாங்க ஒரு திட்டம் தீட்டினர் .அதன் படி அந்த பெண்ணின் உறவினர் வினய் சிங்கின் ஆறு வயதான மகனை நவம்பர் 22ம் தேதி அந்த பெண்னும் அவரின் கணவரும் கடத்தி சென்று விட்டனர் 
அதன் பிறகு   பன்வெல் பகுதியைச் சேர்ந்த 39 வயதான வினய் சிங், கந்தேஷ்வர் காவல் நிலையத்திற்கு சென்று தனது மகன் மற்றும் மருமகள் கடத்தப்பட்டது குறித்து புகார் அளித்தார்.
அதன் பிறகு அந்த விபின் அந்த சிங்கிற்கு போன் செய்து அவரின் மகனையும் மருமகளையும் விடுவிக்க 10 லட்ச ரூபாய் பணம் கேட்டார் .அதனால் அந்த நபர் பணத்தோடு அவர்கள் சொன்ன இடத்திற்கு செல்லும்போது ஒளிந்திருந்த போலீசார் அந்த சிறுவனை மீட்டனர் .பின்னர் அந்த விபினை கைது செய்து விசாரித்த போது தாங்கள் இருவரும் சேர்ந்து செய்த திட்டம் இது என்றதும் போலீசார் அந்த புது மண மக்களை கைது செய்தனர்