“டேய் பணத்தை எடுத்துக்கோங்க, பையன விட்டுடுங்க” கதறிய தொழிலதிபரின் மகன் கொலை -10 லட்சம் நகைகள் கொள்ளை.

“டேய் பணத்தை எடுத்துக்கோங்க, பையன விட்டுடுங்க” கதறிய தொழிலதிபரின் மகன் கொலை -10 லட்சம் நகைகள் கொள்ளை.

பீகார் மாநிலம் நவடா நகரில் வசிக்கும் சத்தியானந்த் என்பவர் அந்த ஊரில் ஒரு முக்கியமான பெரிய வர்த்தகர் .அந்த ஊரில் மிகப்பெரும் செல்வந்தரான அவரின் வீட்டிற்கு திங்கள் கிழமை இரவு ஆறு கொள்ளையர்கள் புகுந்தனர் .அவர்கள் முதலில் அவர் வீட்டின் தரை தளத்தில் உள்ள நகை பணம் போன்றவற்றை கொள்ளையடித்து விட்டு ,பிறகு மேல் பகுதிக்கு வந்தனர் .அப்போது அங்கு தூங்கிகொண்டிருந்த சத்தியானந் மற்றும் அவரின் மனைவியை கயிறு போட்டு கட்டிவிட்டு ,அவர்கள் கத்தாமலிருக்க அவர்களின் வாயில் துணியை வைத்து அடைத்து விட்டனர் .பிறகு அங்கிருந்த நகை பணத்தை கொள்ளையடித்தபோது ,அந்த வீட்டில் இன்னொரு அறையில் தூங்கிய சத்த்தியானந்தின் 9வது படிக்கும் மகன் ரோஷன் அவர்களை பார்த்து விட்டான்

“டேய் பணத்தை எடுத்துக்கோங்க, பையன விட்டுடுங்க” கதறிய தொழிலதிபரின் மகன் கொலை -10 லட்சம் நகைகள் கொள்ளை.
பிறகு ரோட்டில் போவோரை பார்த்து காப்பாற்றும்படி அவர் கத்தியுள்ளார் .இதனால் அந்த கொள்ளையர்கள் அந்த சிறுவனை அடித்து கொலை செய்து விட்டார்கள் .பிறகு அங்கு கொள்ளையடிக்கப்பட்ட 10 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட பொருட்களோடு தப்பியோடிவிட்டனர் .பிறகு கொள்ளையர்கள் போனதும் அந்த வர்த்தகர் போலீசுக்கு போன் செய்தார் .போலீசார் விரைந்து வந்து விசாரணை செய்ததில் இந்த கொள்ளை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது எனவும் ,கை தேர்ந்த கொள்ளையர்கள் இதை நடத்தியுள்ளதாகவும் கண்டறிந்து, போலீஸ் மோப்ப நாய் மூலம் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள் .ஆனால் இந்த கொள்ளையில் அந்த வர்த்தகரின் ஒரே மகனை இழந்தது அனைவரின் இதயத்தையும் கணக்க செய்துள்ளது

“டேய் பணத்தை எடுத்துக்கோங்க, பையன விட்டுடுங்க” கதறிய தொழிலதிபரின் மகன் கொலை -10 லட்சம் நகைகள் கொள்ளை.