காதலனுக்கு சேலை கட்டி விட்டு அடித்து கொன்ற பெண் வீட்டார்

 
bg

தங்களது  மகளை காதலிக்க கூடாது என்று எத்தனையோ முறை கண்டித்தும் மீண்டும் மீண்டும் காதலித்து வந்ததால் அந்த இளைஞருக்கு சேலையை கட்டி விட்டு மரத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்துள்ளனர் பெண் வீட்டார்.   இந்த அதிர்ச்சி சம்பவம் குஜராத் மாநிலம் சோகாரி கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.   

சோகாரி கிராமத்தில் 20 வயதான ஜெய்ஸ் ராவல் என்கிற இளைஞர் அதே கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்திருக்கிறார்.    இவர்களின் காதலுக்கு பெண் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார்கள்.    தங்களது மகளுடன் இனி பேசக் கூடாது என்று இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வந்திருக்கிறார்கள் மிரட்டியிருக்கிறார்கள்.  

q

 இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து காதலித்து வந்ததால் ஜெய்ஸ் ராவல் மீது கடும் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார்கள் பெண்வீட்டார்.   இந்தநிலையில் தனது மகளுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டார் தாய்.   ஜெய்ஸ் ராவலும் பார்த்துவிட்டால் உடனே காதலியை  வீட்டிற்கு அனுப்பிவிட்டு தானும் தனது வீட்டிற்கு சென்றிருக்கிறார். 

 இருவரும் பேசிக் கொண்டிருந்த அந்தப் பெண் தனது கணவரிடம் சென்று சொல்ல இவ்வளவு சொல்லியும் கேட்காமல் மீண்டும் மீண்டும் நம் மகளுடன் சந்தித்து பேசுவது என்று ஆத்திரப்பட்ட பெண்ணின் தந்தை காளிதாஸ் அவரது குடும்ப உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு அந்த இளைஞர் வீட்டிற்கு சென்றிருக்கிறார் .  அங்கே இளைஞர் தனியாக இருந்து இருக்கிறார் .  அவரை வெளியே இழுத்துப்போட்டு அவருக்கு சேலை கட்டி விட்டு மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து இருக்கிறார்கள்.   இதில் அவர் அந்த இளைஞர் மயக்கமடைந்து இருக்கிறார்.  இதுகுறித்து தகவல் அறிந்த அந்த இளைஞரின் குடும்பத்தினர் அங்கு விரைந்து ஓடி இருக்கிறார்கள் .

df

அவர்கள் வரும் செய்தி அறிந்ததும்  அவர்கள் தப்பி ஓடிவிட்டார்கள்.  மரத்தில் கட்டப்பட்டு மயக்க நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.  பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.