மருமகனை சுத்தியலால் அடித்து கொலை செய்த மாமியார்

 
ப்ல்

மருமகனை சுத்தியலால் அடித்து கொலை செய்த மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.  மும்பை வடாலா பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 70 வயதான மூதாட்டியான சாந்தி பாலுக்கு மும்பை வடாலா பகுதியில் வசித்து வந்துள்ளார்.  இவருக்கு ஒரு மகள் உள்ளார்.  பல ஆண்டுகளுக்கு முன்னர் ஐம்பத்தி ஏழு வயதான பிமால் கன்னா என்பவருடன் சாந்தி பாலுக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.   இதையடுத்து இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்து இருக்கிறார்கள்.

 இந்த சந்தர்ப்பத்தில் பிமால் கன்னாவுக்கு சாந்தி பாலின் மகள் மீது ஆசை ஏற்பட்டிருக்கிறது.   இதை சாந்திபாலிடம் தெரிவிக்க,  அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து தன் மகளை திருமணம் செய்து வைத்து இருக்கிறார்.

சு

 திருமணத்திற்கு பின்னர் சாந்தி பாலின் மகளை விமால் கன்னா அடிக்கடி துன்புறுத்தி வந்திருக்கிறார் . இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருக்கிறது.   மகள் படும் துயரத்தை தன் கண் முன்னேயே பார்த்துக் கொண்டிருப்பதால் சாந்தி பார் வேதனையில் இருந்து வந்திருக்கிறார்.  கண்டித்து பார்த்தும் அவர் கேட்கவில்லை.   இதனால் அவர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

 இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி அன்று பிமால் கன்னாவிடம் இதுதொடர்பாக வாக்குவாதம் நடந்து இருக்கிறது .  வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த மூதாட்டி சாந்திபால்,  வீட்டிலிருந்த சுத்தியலை எடுத்து பிமல் கன்னாவின் தலையில் ஓங்கி தாக்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து மயங்கி விழுந்திருக்கிறார்.  இதன் பின்னர் வீட்டில் இருந்து தவறி விழுந்து விட்டதாக சொல்லி அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார் சாந்திபால்.  ஆனால்  கடுமையாகத் தாக்கப்பட்டதால் படுகாயமடைந்து இருப்பதை அறிந்த டாக்டர்கள் போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.

 சிகிச்சையில் பிமால் கன்னா உயிரிழந்ததை அடுத்து போலீசார் சாந்தி பாலை கைது செய்து விசாரணை நடத்தி வந்தபோது,  அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.   இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.