மனைவியை பங்கு போட்டவனை கூறுப்போட்ட கணவன்! கள்ளக்காதல் களேபரம்

 
murder

மேட்டூர் அருகே உள்ள புதூர் பள்ளிக்கூடத்தை சேர்ந்தவர் செல்லவேல்(36). லாரி ஓட்டுநரான இவர் திருமணமாகாதவர். இவருக்கும் தங்கமா புரிபட்டினத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி அழகம்மாள்(40)என்பவருக்கும் கடந்த ஒரு வருடமாக கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு மாத காலமாக இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

நேற்று இரவு மேல் காவேரி கிராஸ் பாலம் அருகில் செல்லவேல் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார், அப்போது வந்த கும்பல் ஒன்று செல்ல வேலை சரமாரியாக வெட்டியது. இதில் செல்லவேல் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற மேட்டூர் போலீஸார், செல்லவேலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அழகம்மாளை  தனி இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அழகம்மாளின் கணவர் ஆறுமுகம் ஆட்களை வைத்து இந்த கொலையை செய்து இருக்கலாம் என்று சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணையை முடிக்கிவிட்டுள்ளனர்.