‘என்ன கட்டிக்கலேன்னா உன் குடும்பத்தையே க்ளோஸ் பண்ணிடுவேன் ‘ -ஒரு தலை காதலனின் மிரட்டலால் தற்கொலை செய்த பெண்..

‘என்ன கட்டிக்கலேன்னா உன் குடும்பத்தையே க்ளோஸ் பண்ணிடுவேன் ‘ -ஒரு தலை காதலனின் மிரட்டலால்   தற்கொலை செய்த பெண்..

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் ஒரு 12 வது படிக்கும் மாணவியை ஒருவர், ஒரு தலையாக காதலித்து வந்தார் .அப்பெண் பள்ளிக்கு போகும்போதும் ,வரும்போதும் அவரை பின் தொடர்ந்து வருவதும் ,அவருக்கு போனில் மெசேஜ் அனுப்புவதுமாக அவர் அந்த பெண்ணை தொல்லை கொடுத்து வந்தார் .மேலும் அவர் மீதும் ,அவரின் நண்பர் மீதும் நிறைய கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன .இதெல்லாம் தெரிந்து கொண்ட அந்த பெண் அவரின் காதலை நிராகரித்தார் .மேலும் தான் நிறைய படிக்க வேண்டும் எனக்கு நிறைய கனவுகள் உள்ளன என்றும் அவரிடம் கூறி அவரை காதலிக்க மறுத்தார் .

‘என்ன கட்டிக்கலேன்னா உன் குடும்பத்தையே க்ளோஸ் பண்ணிடுவேன் ‘ -ஒரு தலை காதலனின் மிரட்டலால்   தற்கொலை செய்த பெண்..
ஆனால் அந்த நபர் தொடர்ந்து அந்த பெண்ணை தொல்லை கொடுத்து வந்துள்ளார் .மேலும் கடந்த திங்கள் கிழமையன்று யாரும் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து அந்த பெண்ணிடம் வந்து ,’நீ என்னை காதலிக்கா விட்டால் உன் குடும்பத்தையே க்ளோஸ் பண்ணிடுவேன்’ என்று மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.இதனால் பயந்து போன அந்த பெண் வீட்டில் அன்றே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .
பிறகு வெளியே போயிருந்த அவரின் பெற்றோர்கள் வீட்டிற்கு வந்து பார்த்த போது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியுற்றனர் .எதனால் இப்படி செய்து கொண்டார் என அவர்கள் யோசித்தபோது ஒரு வேளை , 12ம் வகுப்பு எக்ஸாம் சரியாக எழுதாததால் இப்படி பண்ணிக்கொண்டாரோ என நினைத்தார்கள் .ஆனால் 12ம் வகுப்பு ரிசல்ட் வந்தபோது அவர் 74 சதவீத மார்க் வாங்கியிருந்தார் .
பிறகுதான் தெரிந்தது ,அவரை ஒருவர் காதலிக்க மிரட்டியதால் , பயந்து உயிரை விட்டுள்ளார் என்பது. .இதனால் அந்த நபர்கள் மீது அவர்கள் போலீசில் புகாரளித்தனர் .அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்

‘என்ன கட்டிக்கலேன்னா உன் குடும்பத்தையே க்ளோஸ் பண்ணிடுவேன் ‘ -ஒரு தலை காதலனின் மிரட்டலால்   தற்கொலை செய்த பெண்..
FIR (Photo: IANS)