"பெத்த அம்மாவே கள்ள காதலனோடு சுத்தறாங்களே.." - கொதித்த மகன் என்ன செஞ்சார் தெரியுமா ?

 
illegal affair


தாயின் கள்ள காதலனை ஒரு மகன் கொலை செய்ய முயன்ற சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது .

Youth attacks mother's lover with knife [Representative image]
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜகத்கிரி குட்டா பகுதியில்  வெமுலா நீலம்மா என்ற பெண்  GHMCயில்  பணிபுரிகிறார் .அவருக்கு ஸ்ரீராம் என்ற 19 வயதான மகன் இருக்கிறார் .அந்த பெண் தன்னுடன் பணிபுரியும் அணில் என்ற நபருடன் கள்ள உறவில் ஈடுப்பட்டார் .அதனால் அந்த வாலிபர் வருத்தப்பட்டு இது பற்றி தன் தாயிடம் இந்த கள்ள உறவை கை விடுமாறு பலமுறை கூறினார் .ஆனால் அந்த தாய் மகனுடைய பேச்சை கேட்காமல் மீண்டும் மீண்டும் அந்த காதலனோடு பேசி பழகி வந்தார் .
இதனால் கோவப்பட் அந்த மகன் தன்னுடைய நண்பர்கள் சிலரை அழைத்து கொண்டு அவரின் தாயின் காதலன் அணிலை தாங்கள்  இருக்குமிடத்திற்கு வர சொன்னார் .பின்னர் அங்கு வந்த அவரை அணைவரும் சேர்ந்து கடுமையாக தாக்கி கொலை செய்ய முயன்றனர் ,இந்த தாக்குதலிலிருந்து அந்த அணில் தப்பியோடினார் .பின்னர் கடுமையான காயத்துடன் இருந்த அவரை அங்குள்ள சிலர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .இந்நிலையில் போலீசார் அந்த அணிலை தாக்கிய நபர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களை கைது செய்ய தேடி வருகின்றனர் .