"ஐயோ! பிளேடால கிழிக்கிறானே ,காப்பாத்துங்க..."பட்ட பகலில் பள்ளிக்குள்ளிருந்து அலறிய மாணவி.

 
women murder by her friend for love

 ஒரு மாணவர் தன் நட்பை ஏற்க மறுத்த பெண்ணை பிளேடால் பல இடங்களில் கிழித்ததால் கைது செய்யப்பட்டார் 

Rajasthan teen attacks school girl with blade for rejecting friendship proposal


ராஜஸ்தான் மாநிலம் மார்வாட் ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு மேல் நிலை பள்ளியில் 12ம் வகுப்பில் படிக்கும் 18 வயதான மாணவர் ஒருவர் தன்னுடைய பள்ளியில் 11ம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவி இடம் நட்போடு இருக்க விரும்பினார்  .இதனால் அந்த மாணவர் அடிக்கடி அந்த மாணவியிடம் சென்று தன்னுடைய நட்பை ஏற்றுக்கொள்ளுமாறு  கூறினார் .ஆனால் அந்த மாணவிக்கு அவரை பிடிக்காததால்  ,அவரின் பிரண்ட்ஷிப்பை நிராகரித்தார் .இதனால் அந்த மாணவருக்கு அந்த மாணவி மீது கடும் கோபம்  வந்தது .அதனால் அவரை எப்படியாவது பழி வாங்க சரியான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்திருந்தார் .
அதன் படி கடந்த செவ்வாய்கிழமையன்று அந்த மாணவி பள்ளி இடைவேளை நேரத்தில் தனியாக ஓரிடத்தில் அமர்ந்திருந்தார் .அப்போது அந்த 12ம் வகுப்பில் படிக்கும் மாணவர் அந்த மாணவியிடம் வந்து மீண்டும் தன் நட்பினை  கூறி வாக்குவாதம் செய்தார் .பின்னர் அவர்களுக்குள் வாக்கு வாதம் முற்றியதும் கோவப் பட்ட  அந்த வாலிபர்  தான் கொண்டு வந்த ப்ளேடை எடுத்து அந்த மாணவியை பல இடங்களில் கிழித்து  காயப்படுத்திவிட்டு தப்பியோடினார் .
பிறகு காயப்பட்ட சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சிறுமிக்கு உதவி செய்ய ஓடினர், ஆனால் அவர்  இரத்த வெள்ளத்தில் கிடந்தார் .பிறகு அவரை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு ஆபத்தான நிலையில் சேர்த்துள்ளனர் .பின்னர் தப்பியோடிய அந்த மாணவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்