ஆசிரியர் லோகநாதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

 
டெ

தன்னிடம் டியூஷன் படிக்க வந்த மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியரைக் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.  

 ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் சாலையில் வனத்துறை அலுவலகத்திற்கு முன்பாக டியூசன் சென்டர் உள்ளது.  ஆசிரியர் லோகநாதன் இதை நடத்தி வருகிறார். இவரிடம் டியூசன் படிப்பதற்காக பத்தாம் வகுப்பு மாணவி வந்திருக்கிறார்.

லொ

 அந்த மாணவியிடம் நெருக்கமாக பேசி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட லோகநாதன் அந்த 16 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கி இருக்கிறார்.    மாணவி கர்ப்பமாக இருக்கும் விவகாரம் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரிய வர போக்சோ சட்டத்தில் போலீசில் அவர் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

 அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் ஆசிரியர் லோகநாதனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்  போலீசார்.

இதன் பின்னர் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் பரிந்துரையின்படி,  மாவட்ட ஆட்சியர் ஆசிரியர் லோகநாதனை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டிருக்கிறார்.    இதையடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் லோகநாதனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.