"நீ திடீர்னு இப்படி செய்வேன்னு நான் நினைக்கலே" -காதலியால் ஒரு காதலனுக்கு என்னாச்சி தெரியுமா ?

 
suicide


தான் காதலித்து வந்த பெண் தன்னிடம் பேசாததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

love

நாமக்கல் மாவட்டம் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான பிரசாந்த்  , கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிஎஸ்சி  படித்து வந்தார். அந்த கல்லூரியில் கடந்த ஒரு ஆண்டாக நேரடி வகுப்புகள் நடக்காமல் ,ஆன்லைன் வகுப்பு மட்டும் நடந்து வந்ததால் ,அந்த கல்லூரி மாணவர்கள் அனைவரும் தங்களின் சொந்த  ஊருக்கு சென்று விட்டனர் .அதனால் அந்த மாணவர் பிரசாந்த்தும் தன்னுடைய  சொந்த ஊரான நாமக்கல்லுக்கு வந்து தன்னுடைய வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்பில் படித்து வந்தார் .அப்போது அவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு கல்லூரி மாணவியோடு அவருக்கு காதல் ஏற்பட்டது .இருவரும் கடந்த ஓரு ஆண்டாக ஆன்லைன் வகுப்புகள் மூலம் காதலித்து வந்தனர் .
இதற்கிடையே அந்த மாணவருக்கு கல்லூரி திறந்ததால் அவர் கோவைக்கு கல்லூரிக்கு சென்றார் .அதனால் அவரின் காதலியோடு அவர் போனில் பேச அடிக்கடி முயன்றார் .ஆனால் அந்த காதலி அவரின் போனை எடுக்காததால் அவர் மன வேதனையடைந்ததார் .அதனால் அந்த ப்ரஷாந்த் அங்கேயே  தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .
பின்னர் அவரின் தற்கொலை பற்றி தகவலறிந்த  பொலிஸார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை  அனுப்பி வைத்தனர் .மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்