அதற்கு பணம் தர மறுத்த தந்தை - கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

 
s

அதற்கு பணம் தர தந்தை மறுத்துவிட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர் கல்லூரியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில்  இந்த அதிர்ச்சி சம்பவம்  நிகழ்ந்திருக்கிறது.

 அம்மாநிலத்தில் நிஜாமாபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தவர் சாய்குமார்.   இவர் கல்லூரியில் பணியாற்றும் ஒருவரின் பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே சென்றிருக்கிறார்.  அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது சாய்குமாரின் வாகனம் மோதி இருக்கிறது.   இதில் சாய்குமாரின் வாகனம் கடுமையாக சேதம் அடைந்து இருக்கிறது.

சு

 சாய்குமாரின் வாகனம் மோதியதில் அவருக்கு எதிரே வந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது.   எதிர்தரப்பில் பைக்கில் வந்தவர்கள் இரண்டு பேர் அவர்கள் இருவரும் சாய்குமாரிடம் வாக்குவாதம் நடத்தியிருக்கிறார்கள்.    தங்களுக்கு ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.  சிகிச்சைக்கான பணத்தை  தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.

 வேறு வழியில்லாத சார்ய்குமார் தனது தந்தைக்கு போன் செய்து நடந்ததை எடுத்துச் சொல்லி பணம் கேட்டிருக்கிறார்.   அப்போது அவரது தந்தை என்னை மன நிலையில் இருந்தாரோ தெரியவில்லை.   சாய்குமார் மீது ஏற்கனவே கோபத்தில் எதுவும் இருந்தாரோ என்னவோ தெரியவில்லை.   அதற்கெல்லாம் பணம் கொடுக்க முடியாது.   அதற்கெல்லாம் கொடுக்க என்னிடம் பணம் இல்லை என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.

 இதையடுத்து தன்னிடம் பணம் கேட்டு நச்சரித்து அவர்களை எப்படி சமாளித்தாரோ  என்று தெரியவில்லை.   அங்கிருந்து நேரடியாக கல்லூரிக்கு வந்தவர் கல்லூரியின் மூன்றாவது தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

 மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதை அறிந்த போலீசார் விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றார்கள்.   மாணவரின் தற்கொலை சம்பவம் குறித்து கல்லூரி மாணவர்களிடையே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.